Monday, 28 March 2011

“பண்டி”- “கொட்டா” – ஒட்டர்கள் விழிப்படையும் போது...... ”

அக்கணத்தில்த்தான் அவர்களுக்காக என்னை பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அவர்கள் என்னைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அறுபது, எழுபது என்பது வயதுகளைக் கடந்த தாத்தா பாட்டிகள் 30 பேர்கள். மேலும் முப்பது நாற்பது வயதுகளில் இருந்த 25 விதவைப் பெண்கள். ஆக மொத்தம் ஐம்பது, ஐம்பத்தைந்து பேர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்களின் ஒரு நெருங்கிய உறவுக்காரனாய் அறிமுகமாகி இருந்தேன். அந்த ஊரில் 75 ஒட்டர் குடும்பங்கள் தான். ஆனாலும்; இந்த குடும்பங்களில் 25 விதவைகள் 30 முதியோர்கள்.

Friday, 25 March 2011

“கொள்ளை போகும் நூலகத் துறை”

                                      

கருணாநிதி “கலைஞர்.” “வசனகர்த்தா.” “கவிஞர்.” “எழுத்தாளர்.” “நூலாசிரியர்.” “முத்தமிழ் அறிஞர்.” சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை கம்யூனிஸ்ட் என்றும் கூறிக்கொள்பவர். இப்படிப்பட்டவர் தனது ஆட்சிக் காலத்தில் இந்த ஐந்தாண்டுகளில் சில ஆயிரம் கோடிகளுக்கு பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்கிக் குவித்திருக்க வேண்டும் அன்றோ?

Friday, 18 March 2011

"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"


                           
நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும்  வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டயாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து  நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின்     நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?