அதற்கு முன்பாக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் (2001-2006) பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்கிய கூட்டுத் தொகையை இங்கே தருகிறோம். செல்வி ஜெயலலிதா ஒன்றும் “எழுத்தாளர்” அல்ல. “முத்தமிழ் வித்தகர்” அல்ல. வாழும் “தொல்காப்பியரோ” “வள்ளுவரோ” அல்ல. இவர் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்கியதோ அற்பத் தொகையான 47 கோடியே 73 லட்ச ரூபாய்க்குத் தான். இவர் சர்ச் பார்க் கான்வென்ட் ஸ்கூல் மாணவி தானே? இவரென்ன 400 கோடிச் செலவில் உலகச் செம்மொழி மாநாடு நடத்தவில்லையே.
செல்வி ஜெயலலிதா – 2001-2006.
2001-2002 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட நூல்கள் ரூ. 5.75 கோடி
2002-2003 ரூ. 8.95 கோடி
2003-2004 ரூ. 6.75 கோடி
2004-2005 ரூ. 6.58 கோடி
2005-2006 ரூ. 8.43 கோடி
-----------------------
மொத்தம் ரூ.47.73 கோடி
-----------------------
கலைஞர் கருணாநிதி – 2006- 2010.
2006-2007 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட நூல்கள் ரூ. 1.71 கோடி
2007-2008 ரூ.17.33 கோடி
2008-2009 ரூ.16.63 கோடி
2009-2010 ரூ.15.50 கோடி
-----------------------
மொத்தம் ரூ.51.17 கோடி
-----------------------
ஆனால் நம்ம தங்கம் தென்னரசு இதிலும் விட்டுத்தந்துவிட மாட்டார். ஜெயலலிதாவை விடவும் அதிகமாய் கலைஞர் 3 கோடியே 44 லட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கி இருக்கிறாரே என்பார் தங்கம் தென்னரசு. இப்படி பேசுறதுலே தானே இவங்க காலம் ஓடிக் கொண்டிருக்கிறது? அவர் உட்கார்ந்திருக்கிற சீட் அப்படி இல்லீங்களா?
நமக்கு இன்னொரு சந்தேகங்க. இப்படி இந்த 5 வருட கால கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நூல்கள் வாங்கப்பட்டிருக்கிற 51.17 கோடியில் முக்கால்வாசியில் கலைஞர் எழுதிய நூல்களும், கனிமொழியும் அங்கம் வகிக்கிற ஜெகத் கஸ்பரின் - தமிழ் மையத்தின் ஓர் அங்கமான முன்னோர் பதிப்பகத்தின் நூல்களையுமே வாங்கி இருப்பார்கள் போலும்.
இன்னும் நிறைய வெட்கக் கேடுகள் இருக்கின்றன. ஆவற்றில் ஒன்று: தமிழகம் பூராவிலும் பொது நூலகத் துறையின் கீழ் இருக்கின்ற நூலகங்கள் 4029. இவற்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஊழியர்கள் 3029. அப்படியானால் ஆயிரம் நூலகங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படவே இல்லை. நாம் விசாரித்தறிந்த செய்தி இது. பக்கத்து நூலகங்களில் இருந்து அட்டெண்டர், வாட்ச்மேன் போன்றவர்கள் அவர்களுக்கு தோதுப்பட்ட நேரங்களில் மட்டும் கடந்து பல வருடங்களால் ஆளில்லாத நூலகங்களை திறந்து வைக்கிறார்கள். ஆளில்லாத ரயில்வே கிராசிங் மாதிரி நூலகங்கள்.
செல்வி ஜெயலலிதாவின் வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தமிழகம் பூராவிலும் பல லட்சம் பேர்களுக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறோம் என்று தமிழக அமைச்சர்கள் முழங்காத நாள் உண்டா? இது எந்தளவிற்கு உண்மை என்கிறீர்களா? நமது பொது நூலகத் துறையில் நிரந்தரமாய் ஆயிரம் நிரந்தர காலிப் பணியிடங்கள் நிறப்படாதது ஒன்று போதாதா? இந்த கணக்கு இத்தோடு முடியவில்லை. பின்னால் வருகிறது விபரம்.
2006 மே யிலிருந்து கலைஞர் முதல்வர் ஆனதிலிருந்து 2010 நவம்பர் 30 முடிய நூலகத் துறையில் எத்தனை ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்? இக்காலங்களில் எத்தனை பேர்கள் பணியில் புதியதாய் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்? இது நாம் கோரிய மற்றொரு தகவல்.
“இது பற்றிய விபரங்கள் பொது நூலகத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இல்லையாம். இந்த விபரங்களை எமக்கு வழங்கிட மாவட்ட நூலகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஒரு விழுப்புரம் ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நூலகத்திலேயே 5 ஊழியர்கள் இல்லை. பல வருடங்களாய் காலியாக கிடக்கின்றன. இவர்கள் நமக்கு தகவல் தரப் போகிறார்களாம். ஏற்கனவே, ஆயிரம் காலிப் பணியிடங்கள் பல வருடங்களாகவே நிறப்பப்படவில்லை. மேலும், 2006ல் இருந்து பொது நூலகத் துறையிலிருந்து பல நூறு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இந்தக் காலிப்பணி இடங்களும் நிரப்பப்படவில்லை.
இன்னும் ஒரு சின்ன வெட்கக்கேடு. துமிழகம் பூராவிலும்முள்ள 4029 பழைய நூல்களை செப்பனிட்டு மராமத்து செய்யவும் அலமாரிகள், மேஜைகள் வாங்கவும் புதிய நூலகக் கட்டிடங்கள் கட்டவுமாய் கலைஞரின் இந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் செலவிடப்பட்டடிருக்கிற தொகை சராசரியாக ஆண்டுக்கு 3.5 கோடி, அட… எம்மாம் பெரிய தொகை இது?
நமக்கு மேலும் அளிக்கப்பட்டிருக்கிற ஒரு தகவல்;: “தமிழ் நூல்கள் முதற் பதிப்பு 1000 பிரதிகளும் மறு பதிப்பு 600 பிரதிகளும் வாங்கப்படுகின்றன.”
இங்கே அடிக்கோடிட்டு குறிப்பிட்டுக் கூற வேண்டிய விசயம்;: 2009ல் பிரசுரமாகியுள்ள புதிய நூல்களை பொது நூலகத் துறைக்கு பெற்றுக் கொள்வதற்கான நூலக ஆணை 2010 முழுசாய் கழிந்து விட்டது. மார்ச்சும் பிறந்து விட்டது. இன்னும் நூல்கள் ஆணை வழங்கப்படவில்லை. எனவே, இதற்குப் பிறகு தான் ஆணை வழங்கப்பட்டு 2009ஆம் வருடத்திய நூலை நூலகத்துறை பெற்றுக் கொள்ளும். இதற்குள் தேர்தல் வந்துவிட்டது. இதுவே தான் பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதாக கூறுகிறார்கள் பதிப்பக நண்பர்கள். இந்த ஆணை நடைமுறையினால் 2009ல் பிரசுமாகி இருக்கிற பல ஆயிரம் நூல்கள் என்றோ ஒரு நாள் 2011ல் நூலக வாசகரை சென்றயடைப் போகிறது.
கனிமொழியின் கனவுப் “பொற்க்கோயில்” அண்ணா நூற்றாண்டு நூலகம். வெளிநாட்டில் எங்கோ ஒரு பிரமாண்ட நூலகத்தைப் பார்த்து பிரமித்து – அந்தக் கனவோடு வந்து கனிமொழி முதல்வர் கலைஞரை இசையச் செய்து கட்டி முடிக்கப்பட்டதே இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம். பொது நூலகத் துறைக்கு 2009-2010ல் ரூ.15.50 கோடிக்கு நூல்கள் வாங்கவே எல்லா ஊடங்களிலும் திரும்பத் திரும்ப விளம்பரம் தந்திருக்கிற பொது நூலகத் துறை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு 106 கோடி ரூபாயக்கு நூல்கள் வாங்கியதை – ஊடங்களில் விளம்பப்படுத்தவே இல்லை. இப்படி விளம்பம்படுத்தி இருந்தால் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அரிய மிகச் சிறப்பான நூல்கள் எல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் பொது நூலகத் துறை இயக்குநர் அறிவொளிக்கு பெரிய அளவில் கமிஷன் கிடைத்திருக்காது.
இந்த 106 கோடி ரூபாய்க்கு நூல்கள் வாங்கிட அறிவொளி தனக்கு கமிஷன் தரக்கூடிய பதிப்பாளர்களையும், நூல் விற்பனையாளர்களையும் நேரடியாகத் தொடர்பு கொண்டார். தமிழக பதிப்பாளர்களைவிடவும் டெல்லிப் பதிப்பாளர்களிடையே வியாபாரம் செய்திருக்கிறார். இந்த 106 கோடி தொகையில் பெரும் பகுதி டெல்லி பதிப்பாளர்களுக்கே போய் சேர்ந்திருக்கிறது. இதில் அறிவொளி அடித்திருக்கிற கமிஷன் தொகை பல கோடிகள். இன்னும் 200 கோடிக்கு நூல்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். சரி. இதைக்கூட நாம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நூல்கள் வாங்கும் பொருட்டு ஊடங்களில் விளம்பரம் செய்யப்படாததால் பல ஆயிரம் அரிய நூல்கள் கிடைக்கவிடாமல் செய்திருக்கிற அறிவொளியின் இந்த கொடூரமான தவறை மட்டும் மன்னிக்கவே முடியாது.
இன்னும் இவர் செய்திருக்கிற கொடூரத்தைப் படியுங்கள். இந்நூலகத்திற்கு கணிப்பொறிகள் வாங்க ஒதுக்கப்பட்டத் தொகை 23.25 கோடி ரூபாய். இந்தக் கணிணிகள் விரிவான டெண்டர் விடப்பட்டு வாங்கியிருக்க வேண்டும். தமிழகத்தின் “எல்காட்” நிறுவனம் மூலமாகவே வாங்கியிருக்க வேண்டும். அதற்கான நிபுணத்துவம் வாய்ந்தது எல்காட் மட்டும் தான். கணிணி வாங்கியது எப்படி என்று தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக தகவல் வேண்டினால், அதற்கான பதில் எதுவும் இல்லை. இதிலும் பெரும் மோசடி நடந்திருக்கிறது.
இது மட்டுமல்ல ஆயசம ரூ ஆநஉடiநெ ளுழடரவழைn (p) டுவன.இ என்ற நிறுவனத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாதமாதம் 7.5 லட்சம் அறிவொளியால் வழங்கப்பட்டு வருகிறது. இக்கட்டணம் எதற்காக வழங்குகிறார் என்பது குறித்து விவரம் கோரினால் அதற்கான பதில் எதுவும் இல்லை. அப்படியானால் மேற்குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அளிக்கப்பட்டிருப்பது எதற்காக? மாதமாதம் மொய் எழுதுகிறாரா அறிவொளி! இதில் அவருக்கான கமிஷன் எவ்வளவு? பொதுவாக நூலகத்துறையில் கமிஷன் 40 சதமாயிற்றே!
இதைவிடக்கொடுமை, இந்நூலகத்திற்கு வாங்கிய புதிய நூல்களை பிரிக்கும் பணிக்காக 5 லட்சத்திற்கு இரும்பு நூலடுக்குகள் வாங்கப்பட்டுள்ளது. முறைப்படி இரும்பு நூலடுக்குகள் அரசு நிறுவனமான டான்சியில் தான் வாங்க வேண்டும். டான்சியில் வாங்கினால் கமிஷன் கிடைக்காது என்பதால், கமிஷனுக்காக தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வாங்கியுள்ளார் அறிவொளி. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கக் கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் விரிவான டெண்டர் விடப்பட்டு, ஊடங்களில் விரிவான விளம்பரம் கொடுத்து வாங்க வேண்டும் என்பது விதி. இவ்விதி முறைகள் எதுவும் நூலகத்துறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்றால், எதுவும் இல்லை. ஏதாவது ஒரு வேலை செய்ததாக தொடர்ந்து நூலகப் பணம் கையாடல் செய்யப்பட்டு வருகிறது. வீட்டுக்கொரு நூலகம் தேவை என்று சொன்ன அண்ணாவின் பெயரினை நூலகத்திற்கு சூட்டி கோடிக் கணக்கில் பணத்தினை கொள்ளையடித்துக் கொண்டுயிருக்கிறார் இயக்குநர் அறிவொளி.
பொது நூலகத்துறைக்கு அரசு 10 ரூபாய் கூட நிதி வழங்குவதில்லை. ஆனால் கலைஞர் விதி விலக்காய் பதிப்பாளர் நல வாரியத்திற்கு 50 லட்ச ரூபாய் வழங்கி அசத்தியுள்ளார். இந்த வாரியத்தின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. இதில் பல்வேறு பதிப்பாளர்களின் பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நூலகத் துறையின் இணை இயக்குநர் மற்றும் இயக்குநரான அறிவொளி ஆகியோர் வாரியக்குழு உறுப்பினர்கள்.
இந்த வாரியத்தின் சிறப்பாய்வு முதல் கூட்டமே 24.02.2010-ல் தான் முதல்வர் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. ஆதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் கலைஞர் அளித்துள்ள 50 லட்ச ரூபாய்க்கான வங்கிக் கணக்கே 10.03.2010ல் தான் தொடங்கப்பட்டது.
ஆனால், 24.02.2010ல் கலைஞரின் தலைமையில் நடந்த சிறப்பாய்வுக் கூட்டத்தில் இந்த அறிவொளி விட்டாரு பாருங்க ஒரு பீளா ரீல். எல்லா வாரியத் தலைவர்களும் (தமிழகத்தில் மொத்தத்தில் 25 நல வாரியங்கள் உள்ளன) அசந்தே போனார்கள்.
“பதிப்பாளர் நல வாரியத்தில் 2360 உறுப்பினர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இவர்களில் 1027 பேர்களுக்கு வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. 236 பயனாளிகளுக்கு 3 லடச்த்து 38 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்பட்டும் விட்டது.”
நான் ஏ.ஐ.டி.யூ.சி.கட்டுமானத் தொழிலாளர் சங்கம், உடல் உழைப்பு தொழிலாளர் சங்கங்களில் குறிப்பிடத்தக்க ஊழியர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பிறகே நல வாரிய பயன் கிடைக்கும். இது அரசு விதி. பணியின் போது விபத்தில் அடிபட்டு ஊனமடைந்து விட்டாலோ ஊனத்தின் சதவீதத்திற்கான இழப்பீட்டை சங்க உறுப்பினர்களுக்கு பெற்று தந்திட ஊழியர்கள் எங்களுக்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.
ஆனால், பதிப்பாளர் நலவாரியத்திலிருந்து விபத்து இழப்பீட்டு நிதி பலருக்கு (தலா 25 ஆயிரம்) வழங்கி விட்டாராம். கல்வி உதவித் தொகை (உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ஆயிரம் ரூபாய் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் 2 ஆயிரம்) 2 லட்சத்து 64 ஆயிரத்து 900ம் மற்றும் திருமண உதவித் தொகை 2 ஆயிரம், மகப்பேறு உதவித் தொகை 12 ஆயிரம், கண் கண்ணாடி வாங்க 35 ஆயிரம் என்று 236 பயனாளிகளுக்கு 3,38,900 ரூபாய் வழங்கி விட்டாராம். இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கிற காரியமே அல்ல.
ஆனாலும் துளியும் கூச்ச நாச்சமே இல்லாமல் 6 கோடி மக்களின் ஆட்சித் தலைவரிடம் அத்தனை உயர் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு அப்பட்டமான தார் பாலீனில் வடிகட்டிய பொய்யை சொல்லி ஏமாற்றி இருக்கிறார் அறிவொளி. இப்போது தான் எனக்கே கோபம் வருகிறது. இப்பொடியொரு அயோக்கியத் தனமான ஒரு பிண்டத்தை அரசு பதவியில் தொடர்ந்து நீடிக்க விடக்கூடாது என்கிற கோபம்.
ஆக பதிப்பாளர் நல வாரியத்தில் ;முறையான உறுப்பினர்கள் சேர்க்காமல், அடையாள அட்டையே வழங்காமல். முறையான வாரியக் கணக்கிலிருந்து தொகை வழங்காமல் மோசடியாக 3,38,900 ரூபாய் வழங்கியதாக அறிவொளியால் சுருட்டப்பட்டிருக்கிறது. இந்த வாரியத்தில் உறுப்பினராகிய பின்னர் ஊனமடையாமல் பிறவியிலேயே ஊனமானவர்களுகம், வாரியத்தின் உறுப்பினராவதற்கு முன்னர் பெறப்பட்ட கல்வித் தகுதியினையும் கணக்கில் கொண்டு பலருக்கு செங்கல்பட்டு, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் முதல்வர் கலைஞரிடம் அறிவொளி இப்படி பச்சைபொய் கூறியது 24.02.2010-ல். கலைஞர் தந்த 50 லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்தது 10.03.2010ல்தான். எனவே இதில் சுருட்டப்பட்டது மக்களின் நூலக வரிப்பணம்.
ஆறிவொளியின் இந்த இமாலய மோசடி-3,38,900 ரூபாய் அறிவொளி அரசுக்கு பெரும் இழப்பு செய்ய வைத்திருப்பது முதல்வர் கலைஞருக்கும், துறை அமைச்சர் தென்னரசுவிற்கும் ஆதாரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அறிவொளி மீது எந்த நடவடிக்கையுமே இதுவரை எடுக்கப்படவில்லை.
இன்னும் ஒரு செம காமெடி. பதிப்பாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைக்கான செலவு 1,88,644 ரூபாயம். 2360 கையகல அடையாள அட்டை அச்சிட இவ்வளவு பெருந்தொகை செலவாம். சரி. போகட்டும். இந்த தொகையை வாரிய நிதிலிருந்துதானே வழங்கி இருக்க வேண்டும்? நூல்கள் பதிவுக் கட்டணத்திலிருந்து செலவு செய்யப்பட்டிருக்கிறது. நூலக ஆணைக்குழுவின் கீழ் உள்ள நூலகங்களுக்கு நூல்கள் வாங்கும் பொருட்டு பதிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டும் பதிவு கட்டணத்தொகையினை வாரியத்திற்கு அள்ளி இறைத்திருப்பது நியாயமற்ற செயல்.
ஆறிவொளியின் இன்னுமொரு கேடுகெட்ட செயல் இது. ஏற்கனவே முதல்வர் கலைஞர் பதிப்பாளர் வாரியத்திற்கு தந்த 50 லட்ச ரூபாய் பணத்தில் 10 ரூபாய் கூட செலவு செய்யப்படாமல் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் வாரியத்திற்கு தொடர் நிதி வேண்டும் என்பதற்காக 11.5.2010ல் அரசாணை எண் 130 பள்ளிக் கல்வித் துறை (கே2) என்கிற ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆணை இவ்வாறு கூறுகிறது@ “2009ம் ஆண்டு பதிப்பு நூல்களை நூலகங்களுக்கு வாங்கும் பொருட்டு நூலகத் துறை பதிப்பாளர்களுக்கு செலுத்தும் பணத்தில் 2.5 சதவிதிதம் பிடித்தம் செய்யப்படும்” என்று. சரி. பிடித்ததம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவி;ட்டார்கள் பதிப்பாளர்கள்.
அப்போது 2007ம் ஆண்டு பதிப்பு நூல்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வேலை நடந்து கொண்டிந்தது. அரசு 2.5 சதவிதிகத் தொகை பிடித்தம் செய்ய கூறி இருந்ததோ 2009 பதிப்பு நூல்களுக்கு. ஆனால், 2007ஆம் ஆண்டு பதிப்பு நூல்களுக்கே அநியாயமாய் 2.5 சதவிகிதத் தெகை பிடித்தம் செய்துவிட்டார் அறிவொளி. இப்படியெல்லாம் செய்ய இவருக்கு அதிகாரம் எவர் கொடுத்தார்? இப்படி அக்கிரமமாய் பிடித்தம் செய்யப்பட்டத் தொகை ரூ.15,81,269. சரி. இவர் இந்தத் தொகையை வாரியத்திற்கென முறையாக தொடங்கப்பட்டிருக்கிற பாரத மாநில வங்கி, கருவூலக் கிளை, ஆயிரம் விளக்கிலுள்ள கணக்கில் அன்றோ செலுத்தியிருக்க வேண்டும்? ஆனால், முறைகெடாக நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதலிடு செய்திருக்கிறார் அறிவொளி. இந்த வங்கியிலிலும் இத்தொகைக்கு ஈடாக அறிவொளியின் பினாமிகளுக்கு கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார் போலும்.
இன்னும் படியுங்கள். பொது நூலக விதி-நெறிமுறைகள் ஆணானப்பட்ட முதல் கல்வித் துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு வடிவமைத்தது. அவர் சோவியத் நாட்டிற்கு சென்று ஸ்டாலின் அனுபவத்தை தெரிந்து வந்து வடிவமைத்தது. இந்த நெறிமுறைப்படி அந்தந்த மாவட்டம் பூராவிலும் வீட்டு வரியோடு சேர்த்து (10 சதம்) வசூலிக்கப்படுகின்ற நூலகவரி அந்த மாவட்டத்திற்குள்ளேதான் நூலக வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் நூலக வரித் தொகையில் கூட கை வைக்க அதிகாரம இல்லாத அறிவொளி தமிழகத்தின் 30 மாவட்ட நூலக ஆணைக்குழுவின் நிதியையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பெயரில் வீணடித்து பெரும் பகுதியை சுருட்டி வருகிறார். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலக நிர்மான-உள்கட்டமைப்பு ஏற்பாடுகளுக்கு கலைஞர் முதல்வர் தாரளமாய் நிதி வழங்கியுள்ளார். அறிவொளியோ தான் சொந்தமாய் சுருட்டுவதற்காகவே இந்த அநியாயத்தினை செய்கிறார். இங்கே பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் 199-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சென்னை மாவட்ட நூலக வரியிலிருந்துதான் சம்பளம் வழங்கப்பட்டுகிறது.
இதுமட்டுமல்ல, தமிகத்தின் 30 மாவட்டங்களிலும இருந்து உபரி நிதி 75 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு முடக்கி வைத்திருக்கிறார். இந்த 75 கோடி ரூபாயை இவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதே சட்டப்படி தவறு. இந்த 75 கோடியை சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியலாவது டெபாசிட் செய்திருக்கலாம். அது நம்ம வங்கி. அதுமட்டுமல்ல. இந்த 75 கோடி ரூபாய்க்கு தேசிய மய வங்கி தருகிற வட்டியை விடவும் அதிகமாய் மாதத்திற்கு 35 லட்ச ரூபாய் பணம் நம்ம கூட்டுறவு வங்கி தந்திருக்கும். இதற்குள்ளாய் நூலகத் துறைக்கு கூடுதலாய் 4 கோடி ரூபாய் வட்டி பணம் கிடைத்திருக்கும்.
ஆனால், அறிவொளி இந்த 75 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருப்பது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில். நமக்குள்ள சந்தேகம்@ இந்த 75 கோடிக்கு ஈடாக அந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவொளியின் பினாமி நபர்கள் பலருக்கு கடன் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
முக்கால் வாசி வாசர்கள் நூலகத்திற்க செல்வதே அன்றாட நாளிதழ்கள் வார இதழ்கள், திங்களிதழ்கள் வாசிப்பதற்குத்தான். பெரும்பாலான நூலகங்களில் அலுவலகப் பதிவேடுகளில் மட்டும் ஒரு டஜன் நாளேடுகளும், ஒரு டஜன் வார இதழ்களும், ஒரு டஜன் திங்கள் இதழ்;களும் தவறாது வாங்கப்படுவதாக செலவு கணக்கு மட்டும் எழுதப்பட்டிரக்கும். ஒவ்வொரு மாதமும் பணம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் ஏதோ பெயருக்கு ஒரு சில இதழ்கள் மட்டும் வாங்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் இந்த வகையில் சுருட்டப்படும் தொகையில் 50 சதம் மாவட்ட நூலக அலுவலர்களின் பாக்கெட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது.
இந்த திருட்டு அம்பாலமானதே சுவாரஸ்மான கதை. புழைய இதழ்களை காயிலான் கடைக்கு எடை போட்டபோது குட்டு உடைபட்டு விட்டது. வாங்கியதாக கணக்கெழுதி பணம் எடுக்கப்பட்டிருந்த பல இதழ்கள் எதுவும் அப்போது இல்லை. உடனே நேர்மையான ஊழியர்கள், மாவட்ட நூலக அலுவலருக்கும், பொது நூலக இயக்குநர் அறிவொளிக்கும் வெகுண்டு புகார் அளித்திருக்கிறார்கள். ஊழல் செய்த நூலகர்களை அழைத்து இவர்கள் ஒரு முறை ஏதோ பெயருக்கு விசாரித்தனர். “அநியாயமா ஆம்பூட்டுக்கிட்டிங்களே, உங்களுக்கு சாதுர்யம் பத்தாது. ஆளுக்கு ஒரு இருபதாயிரம் வெட்டுங்க போய்க்கிட்டே இருங்க” என்று நைச்சியமாக பேசி ஊழல் செய்தவர்களிடம் பெருந்தொகை கறந்திருக்கிறார் அறிவொளி. இதில் ஏற்கனவே மாதாமாதம் கட்டிங் பெற்றவர்கள் தான் மாவட்ட நூலக அலுவலர்கள். அறிவொளி திருடர்கள் அனைவரையும் விட்டு விட்டார். இந்த திருட்டைக் கண்டு பிடித்து ஊடங்களில் அம்பலப்படுததிய நேர்மையான 18 நூலகத் துறை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்திருக்கின்றார் அறிவொளி.
“அவனுக்கென்ன ஓடிவிட்டான். அகப்பட்டவன் நானன்றோ?” என்கின்ற திரைப்பாடலை இவர்கள் சோகத்தோடு இசைக்கவில்லை. அப்படி இவர்கள் முடங்கிக் கிடந்திருந்தால் இந்த கட்டுரை ஏது? பொது நூலகத் துறை அறிவொளியின் பிண நாற்றமும் வெளிவந்திருக்காது.
எல்லோரும் மேலும் மேலும் செல்வம் சேர்வதற்காக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்கிறார்கள். இவர் அறிவொளி ஆயிற்றே? பொது நூலகத் துறையின் பணத்தை சுருட்டுவதற்காகவே அதே ஏழுமலையானின் பெயரில் ஒரு டிராவல்ஸ் கார் நிறுவனம் சொந்தமாகவே வைத்திருக்கிறார். இவர் இந்தப் பதவிக்கு வந்தே 24 மாதங்கள் தான் ஆகின்றன. இந்த குறுகிய காலத்திலேயே ஏழுமலையான் டிராவல்ஸ்க்கு ரொக்கமாக தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பொது நூலகத் துறையின் பணம் ரூ 2 லட்சத்திலிருந்து 3 லட்சத்திற்குள். ஒரு வேடிக்கை என்ன வென்றால் அறிவொளியின் கட்டுப்பாட்டில் பொது நூலகத் துறையில் ஒரு டஜன் கார்கள் இருக்கின்றன.
இன்னும் வேடிக்கை இயக்குநர் அறிவொளியின் பயன்பாட்டிற்கே இரு கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கார் (வுN-01-பு-4287) இயக்குநரின் அலுவலகப் பயன்பாட்டிற்கு. இன்னொரு கார் அறிவொளியின் மனைவி, குழந்தைகளின் (வுN-01-பு-4045) பயன்பாட்டிற்கு. நிச்சயம் இவருக்குள்ள உறவு முறையினரை அடிக்கடி சென்று சந்தித்து “கெளிப்பை” பகிர்ந்து கொள்ள இவருக்கு பல கார்கள் அவசியம் தான். இவர் மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கும் குடும்ப உறவினர். பண்ருட்டி எம்.எல்.ஏ.வேல்முருகனும் உறவினர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் முதன்மை பெர்சனல் அசிஸ்டெண்டின் மச்சானும் ஆயிற்றே.
இதெல்லாம கூடப் பரவாயில்லை. இந்த அறிவொளி பொது நூலகத் துறை இயக்குநராக பதவிக்கு வந்த நாளில் இருந்து முன்பதிவு எண் குறிப்பிட்டுள்ள இரு கார்களுக்கும் லாக் புக் எழுதப்படவே இல்லை. ஆனால், டேங்க் கொள்ளும்படி அன்றாடம் பெட்ரோல் நிறப்பப்படுகிறது. அடுத்த ஆட்சியில் தான் இந்த பெட்ரோல் செலவு அம்பலமாகும்.
இந்தப் பத்தியை கவனமாக படியுங்கள். ஒரு தடவைக்கு இரு தடவை படியுங்கள். அவனவன் லேசாய் ஐம்பது, அறுபது லட்ச ரூபாயை லேசாய் சுருட்டிட்டுப் போயிருதான். இதை அப்பாவி மக்களிடம் கொண்டு செல்ல பாடாய்பட வேண்டியதிருக்கிறது.
இது மூன்றாம் நிலை நூலர்களை நியமிக்கும் பிரச்சினை. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக இருக்கின்ற மூன்றாம் நிலை நூலகர் காலிப் பணியிடங்கள் குறித்து மாவட்ட நூலக அலுவலர்கள், இயக்குநர் அறிவொளிக்கு அளித்த தகவல்கள். கோயமுத்தூர்-15, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை-2, திருச்சி-9, இராமநாதபுரம்-11, திருநெல்வேலி-19.
அறிவொளி இந்தப்பட்டியலை திருத்தினார். இராமநாதபுரம் 11 காலிப்பணியிடம் என்பதை 12 ஆக உயர்தினார். திருநெல்வேலி 19 என்பதை 20 ஆக உயர்த்தினார். பணியிடமே இல்லாமல், பணியிடம் இருப்பதாக தெரிவித்தது மிகப் பெரிய ஏமாற்றுவேலை. சுதந்திர இந்திய அரசில் எந்தவொரு அதிகாரியும் இதுபோன்ற ஏமாற்று வேலையினை செய்திருக்கவே முடியாது. அறிவொளியைத் தவிர. இதனை ஈடு செய்வதற்காகத் தான் கோயமுத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குறைத்து காண்பித்து தனது பித்தலாட்த்தை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு கூடுதல், குறைவாக காண்பிக்கப்பட்ட பணியிடத்தில் ஊழியர்கள் பணியேற்ற பின்னர். குறைவாக காண்பிக்கப்பட்ட மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்து ஒவ்வொருத்தரிடமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கறந்துள்ளார். இதன் மூலமாக மட்டும் 60 லட்சம் வரை பாத்திருக்கிறார் அறிவொளி.
மற்றொரு கொடுமை என்ன வென்றால்@ ஒரு மாவட்டத்திலுள்ள மூன்றாம் நிலை நூலகர் காலிப் பணியிடங்களை அந்த மாவட்டத்திலேயே பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்ற பதிவறை எழுத்தர்களைக் கொண்டே-மாவட்ட நூலக அலுவல் மூலமாக நிரப்ப வேண்டும் என்பது விதி. இந்த விதியைக் கடைபிடிக்காமல், பதிவறை எழுத்தரைவிட கீழ்நிலைப் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் 15 பெயரைப் பிடித்து, கறக்க வேண்டியதை கறந்து, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றி மூன்றாம் நிலை நூலகராக நியமனம் செய்துள்ளார். அலுவலக உதவியாளர்கள் முதலில் பதிவறை எழுத்தர்களாகத் தான் பதவி உயர்வு பெற முடியும். அதன் பின்னர் உரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் மூன்றாம் நிலை நூலகராக பதவி உயர்வு பெற வேண்டும். இது நடைமுறை மட்டுமல்ல விதியும் கூட. விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு பணத்திற்காக எதையும் செய்யத் தயராகி உள்ளார் அறிவொளி. இம்முறைகேடான நியமனம் அறிவொளிக்குத் தான் லட்சக்கணக்கில் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. அரசுக்கு மாதம் தோறும் 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இக்கட்டுரை எழுதும் மாதம் வரை சுமார் 4 லட்சத்திற்கும் மேலான அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அறிவொளிக்காக. இதையெல்லாம் எப்படி நிரூபிப்பீர்கள் என்கிறீர்களா? இதே பொது நூலகத் துறை இயக்குநர் அலுவலகத்தில் சூப்பிரடெண்டாக திருமதி ரஜினிதான் இந்த கொடுக்கல் - வாங்கல்களை கையாண்டிருக்கிறார். ஆட்சி மாறப் போகிறது. கும்பிக் கதவுக்குப் பின்னால் ரஜினியை நிறுத்தி விசாரிக்கப்படுகின்ற போது எப்படி அப்ரூவர் ஆகாமல் இருக்க முடியும்?
அனைத்து நூலகங்களுக்கும் கணிணி மயமாக்கப்பட வேண்டும் என்பதற்காக இராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை 2009-ல் வழங்கிய பணம் 1 கோடியே 50 லட்சம். இதில் கணிபொறி வழங்கப்பட்டது மாவட்ட மைய நூலகங்களுக்கு மட்டும் தான் (30 மாவட்டங்கள்) இதில் பொறுத்தப்பட்டதும் இலவசமாய் வழங்கப்படுகின்ற கோஹா சாப்ட்வேர் என்கிற ப்ரி சாப்ட்வேர் தான். ஆனால் அறிவொளி மட்டும் இந்த சாப்ட்வேரை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறாராம். சொற்ப எண்ணிக்கையிலான உப்புப் பெறாத கணிணிகள் தான் வாங்கப்பட்டிருக்கின்றன. 15 ஆயிரத்திற்கும் கணிணிகள் கிடைக்கின்றன. 70 ஆயிரத்திற்கும் ;கணிணிகள் இருக்கின்றன. ஆறிவொளி வாங்கியுள்ள கணிணிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டிருக்கிற கணிணிகள். இந்த கணிணிகளுக்கு யு.பி.எஸ். வாங்கியதற்கே 1.20 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாம். இதிலும் முறைகேடே நடந்துள்ளது. ஆனால், இன்னும் இப்பணி முடியவில்லை. வரும் நாட்களில் ஒரு பெரும் தொகை நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து செலுத்தியே ஆக வேண்டும். அது நமது வரிப்பணம்.
சரி. 30 மாவட்ட மைய நூலகங்களுக்கும் கணிணி என்கிற பெட்டி, யு.பி.எஸ் என்கிற கனத்த இரும்பு வாங்கியாகி விட்டது. இதை இயக்கத் தெரிந்த ஊழியர்கள் வேண்டுமன்றோ? அதே இராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வீதம், 14 லட்ச ரூபாய் வழங்கியது 2009ம் ஆண்டில். இந்தப் பணத்தைக் கொண்டு 900 நூலகப் பணியாளர்களுக்கு கணிணி பயிற்சி நிச்சியம் அளித்திருக்க முடியும் அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்களால்.
ஆறிவொளி ஆயிற்றே. விட்டுவிடுவாரா? மொத்தப் பணத்தையும் என்னிடம் கொடுங்கள் என மாவட்ட நூலகர்களிடமிருந்து 14 லட்ச ரூபாiயும் பறித்துக் கொண்டார் அறிவொளி. இந்த 14 லட்ச ரூபாய் மொத்தப் பணத்தையும அவரே ஒன்னும் சுருட்டிக் கொள்ளலே. துமிழகம் ப+ராவிலும் உள்ள நூலகத் துறை ஊழியர்களை நான்கு மண்டலங்காக பிரித்தார். மகாலிபரம், திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் அறைகளை புக் செய்தார். இங்கே பல பிரமாதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நல்ல விருந்துச் சாப்பாடோடு ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். தனக்கு இலாபம் அளிக்கின்ற வகையில் வகையில் எப்படியெல்லாம் முறைகேடுகள் செய்யலாம் என்பது குறித்து அறிவொளியிடம் தான் அரசியல்வாதிகளே பாடம்படித்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு கைதேர்ந்தவர் அறிவொளி.
இராஜார8hம மோகன்ராய் பற்றி வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகம்@ இறந்த கணவர்கள் சடலத்தோடு அவருடைய உயிரோடு இருக்கும் மனைவியையும் சிதையில் எரித்துக் கொல்லும் பழக்கம் வட இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. இதைத் தடுத்து நிறுத்திய மகத்தான சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன்ராய். இவருடைய பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதே இராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை. அவருடைய பெயரிலான நிதி கேளிக்கைக்காக செலவிடப்படுவது எத்தாப் பெரிய வேதனை?
ஆனால், ஒரு ஆறுதலான செய்தி. 2008ம் ஆண்டில் இந்த கணிணி பயிற்சிக்காக அளிக்கப்பட்டத் தொகை நூலகத் துறை ஊழியர்களுக்கு கணிணிப் பயிற்சி அளிக்கப்பட முறையாக செலவிடபட்டிருக்கிறது. ஏனென்றால் அப்பொது அறிவொளி பொது நூலகத் துறை இயக்குநர் அல்ல.
இப்படிப்பட்டவரின் எந்த ஒரு செயலும் சுருட்டுவதற்காகவே இருக்கும். இருந்திருக்கிறது. நூலகத்தை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக மாணவர்களுக்கான கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, வாக்கியப் போட்டி நடத்தி இருக்கிறார். இவர்களுக்கு இவர் வழங்கிய பரிசு ஐந்து இலட்ச ரூபாயாம். கணக்கெழுதி எடுக்கபட்டிருக்கிறது. இவர்களை இந்தியாவிற்குள்ளும், சிங்கப்ப+ருக்கும் சுற்றுலா அழைத்துச் செல்வதாக சுறப்பட்டது ஸ்பான்சர்கள் மூலமாக. ஆனால் இதற்காக நூலக நிதியிலிருந்து பல லட்சம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இவருக்கு அதிகாரத்திமிர் 100 சதம் எனில், ஆணாதிக்க திமிர் மேலும் 100 சதம், தேனி மாவட்ட நூலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சராக இருப்பவர் இரு குழந்தைகளின் தாய் மல்லிகா. இவரோடு ஒரு இயக்குநர் பேச வேண்டியதில்லை. ஒரு டி.ஜி.பி. ஒட்டப்பிடாரத்திலுள்ள ஒரு போலீஸ்காரரோடு பேசவா செய்வார்? தேனி மாவட்ட நூலக அலவலகத்தில் அலவலரும், கண்காணிப்பாளரும் குத்துக்கல்லாட்டம் இருக்கின்றார். எவரிடமோ மல்லிகாவின் கைபேசி நம்பரை வாங்குகிறார். மல்லிகாவிடம் மிரட்டுகிறார். “ நீ சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கிறே, உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றேன் பாரு. உன்னை என்னோட இயக்குநர் அலவலகத்தில் மாற்றுப் பணியில் நியமிக்கிறேன். உடனே வந்து பணியில் ஜாய்ண்ட் பண்ணு” என்று மிரட்டியிருக்கிறார் அறிவொளி.
இவருடைய அலுவலகத்திலேயே கண்காணிப்பாளராக பணிபுரிந்த திருமதி இராஜலட்சமியிடம் இவர் நடந்து கொண்ட முறை சைக்கோத்தனமானது. 5.8.2010 அன்று மாலை 6 மணிவரை அதே அலுவலகத்தில் பணிசெய்திருக்கிறார் தங்கை ராஜி. இவருக்கு அன்று கமுக்கமாய் மாற்றல் ஆணை தயாராகிறது. அந்த ஆணையில் கையெழுத்துப் போடுகிறார் அறிவொளி. பணி முடித்து பஸ் பிடித்து இரவு 7 மணிக்க வீடு போய் சேர்கிறார் ராஜி. அவருடைய வீட்டிற்கு அNது நூலக இயக்குநர் அலுவலகத்திலிருந்து மூன்று பேர்கள் ஒரு குழுவாக வருகிறார்கள். “இந்தா உன் டிரான்ஸ்பர் உத்தரவு. இதைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கொடுங்கள்”என்று மிரட்டுயிருக்கிறார்கள் இயக்குநரின் அடியாட்களான அந்த மூன்று பேரும்.
தேனி மாவட்ட இளநிலை உதவியாளர் உமாதேவி. இவரை சேலம மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் முன்னர் தன்னை வந்து சந்திக்கும்படி மாவட்ட நூலக அலுவலர் கேசவன் மூலமாக சொல்லி அனுப்பி இருக்கிறார். பாவம் உமாதேவி தனது கணவரோடு சென்னைக்கு வந்து மகா கணம் பொருந்திய அறிவொளியை தரிசித்திருக்கிறார்கள். கணம் அறிவொளி உமாதேவியை மட்டுமல்ல, அவருடைய கணவரையும் தரக்குறைவாக பேசி இருக்கிறார். தரக்குறைவான மனிதன் மற்றவர்களை தரத்தோடவா நடத்துவார்?
அறிவொளி பணம் பண்ணுவதற்காகவே-விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதே கலந்தாய்வு. அதில கலந்து கொண்ட தேனி மாவட்ட நூலகப் பெண் ஊழியர்களிடம் “கண்ணியமான” மனிதர் அறிவொளி உதிர்த்த “கண்ணியமான” வாத்தை இது@ “நீங்கள் பொம்பளை மாதிரி நடந்து கொள்ளுங்கள்” “கல்வி அழகே அழகு”-இது தொல்காப்பியம். கலைமகளே குடியிறுக்கிற நூலகத்துறையின் கற்றுணர்ந்த ஒரு தலைமையாளர் சுட்டிக் காட்டுகிறார், “பொம்பளை மாதிரி”. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக இது ஒன்றிற்காகவே அடுத்த முதல்வர் ஜெயலலிதா முன்பாக இவர் ஆஜராகியே தீர வேண்டியதிருக்கும்.
அறிவொளியின் அடுக்கடுக்கான பகற்கொள்ளை, அதிகார துஷ்பிரயோகம், ஊழியர் விரோத போக்கு குறித்து அரசுத்துறை செயலாளருக்கு முறைப்படி தெரிவித்தும்-எந்தவொரு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் - வெறுத்துப்போன நூலகத் துறை ஊழியர்கள் 4.8.2010ல் கூண்டோடு விடுமுறை எடுக்கும் போராட்டத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அறிவொளி 3.8.2010ல் ஒரு குறுக்குப் புத்தியான குள்ள நரித்தனமான வேலை செய்திருக்கிறார்.
அதாவது, “4.8.2010 அன்று மாண்புமிகு முதல்வர் தமிழக நூலகத் துறை பற்றி ஆய்வு நடத்துகிறார். எனவே, 4.8.2010ல் எவரும் விடுமுறை எடுக்கக்கூடாது” என்று அறிவொளி 3ந்தேதி பணி நேரமெல்லாம் முடிந்த பிறகு. எல்லா மாவட்டத்திற்கும் தகவல் அனுப்பியிருக்கிறார் அறிவொளி. அரசுத் துறை செயலாளருக்கே தெரியாமல் இதைச் செய்திருக்கிறார். தன்னை அரசுத் துறை செயலாளர் பதவியில் தன்னைத்தானே உயர்த்திக் கொண்டு இதைச் செய்திருக்கிறார். அன்று விடுமுறை எடுத்த திருமதி.இராஜலெட்சமி, வரதராஜன் ஆகியோர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல் செய்திருக்கிறார் அறிவொளி.
4.8.2010 முதல்வர் ஒன்றும் பொது நூலகத் துறை பற்றி ஒன்றும் ஆய்வு நடத்தவில்லை. இது பற்றி முதலமைச்சர் அலுவலகத்திலும், அரசுத் துறை செயலாளர் அலுவலகத்திலும் தகவல் அறியும் மனு தாக்க செய்து தகவல் கேட்டதில் கிடைத்த தகவல்@ “4.8.2010ல் முதல்வர் இப்படி ஒன்றும் ஆய்வு நடத்தவில்லை” இவருடைய ஊழல்களை மூடி மறைக்க இவர் பயன்படுத்தியதோ முதல்வரின் பெயரை, ஒரு சாதாரண இயக்குநருக்கு முதல்வர் பதவி, 6 கோடி மக்களின் ஆட்சித் தலைவர் பதவி கிள்ளுக் கீரையாகப்படுகிறது.
பாவம் நூலகத் துறை ஊழியர்கள். நொந்து நூலாகி புதியதோhர் விநோத கோரிக்கையை அரசின் முன் வைத்திருக்கிறார்கள், “ஊழல் பெருச்சாளி அறிவொளி மீது உடனே நடவடிக்கை எடுங்கள். அல்லது அவர் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்திருக்கிற நூலகத் துறை ஊழியர்களான எங்களை உடனே தற்காலிக பணிநீக்கம் செய்யுங்கள்” இந்த அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் பொது நூலகத் துறை ஊழியர்கள்.
ஆளும் வர்க்கத்தை துணைக்கு வைத்துக் கொண்டால் எதுவும் செய்யலாம் என்பதுடன், பாதிப்பு ஏற்படாது என்பதற்கு அறிவொளி தான் எடுத்துக்காட்டு. எந்தவொரு சம்மந்தமும் இல்லாத நூலகத் துறையிலிருந்து சங்கமம் நிகழ்சிக்காக ஒரு பெரும் தொகையினை வழங்கியுள்ளார் அறிவொளி. இப்படியாக மக்களின் வரிப்பணத்தினை வாரியிறைத்து ஆளும் வர்க்கத்திற்கு சோளப்பொறியினை போட்டு, பூசணிக்காயை திருடிக் கொண்டிருக்கிறார். இது போன்ற முறைகேடுகள் எல்லாத்திற்கும் காரணம் இப்பணத்தினை கையாளுவதில் எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது என்பது தான். ஒவ்வொரு அலுவலரும் தனது சொந்தப் பணமாக நினைத்துக் கொண்டு இதனைக் கையாள்வதால் தான் இவ்வளவு முறைகேடுகள் நடந்து வருகின்றது. இதனைத் தடுக்க ஒரே வழி. நூலகத் துறைக்கான பணப்பறிமாற்றத்தினை கருவூலகத்தில் செலுத்தி, அதிலிருந்து பணம் கோரினால் முறைகேடுகள் நடைபெறுவது பெரும்பகுதி தடுக்கப்படும் என்பது தான் உண்மை.
இயக்குநர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காலிப்பணியிடத்தினை தனியாருக்கு தாரை வார்த்து தந்து 3 லட்சம் வரை பெற்றிருக்கிறார். இயக்குநர் அலுவலகத்தினைச்சுற்றி ஏக்கர் கணக்கில் காலிப்பணியிடம் உள்ளது. இதனை தனிநபருக்கு வாடகைக்கு விட வேண்டுமென்றால் ஊடங்களில் விளம்பரம் அளித்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் கோரும் அதிகபட்ச ஏலத்திற்கு விட வேண்டும். இல்லையெனில் பொதுப்பணித் துறையினரிடமிருந்து தரை வாடகை நிர்ணயம் செய்து விட வேண்டும். மேற்கண்ட நடைமுறைகள் எதுவுமின்றி, இயக்குநர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கார் கம்பெனிக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் என்ற அடிப்படையில், மிக மிகக் குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறார். இதன் மூலமாகவும் 3 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். “மிகக் குறைந்த நாட்களில் முறைகேடாக பணம் சம்பாதிப்பது எப்படி” என்ற தலைப்பில் தனது அனுபவப் பூர்வமான கருத்துக்களை பதிவு செய்து நூல் எழுதுவதற்கு முழுத் தகுதி அறிவொளிக்குத் தான் உண்டு. அப்புத்தகத்தையும் தேர்வு செய்து அனைத்து நூலகங்களும் வழங்கும் பட்சத்தில் அதிலிருந்தும் ஒரு பெரும் தொகை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற அவருக்குத் தெரியாத வழிமுறையினை நான் அறிவொளிக்குச் சொல்லிக் கொள்கின்றேன்.
தொடர்ந்து நீங்கள் வாசிக்கப்போவது 7.3.2011 அன்று சென்னை அண்ணாசாலை பொது நூலகத் துறை நுழைவாயிலிலேயே நடந்த உண்மைச் சம்பவம். ஆறிவொளியின் தறுதலைத்தனத்தைக் கண்டித்து அன்று காலை 11 மணிக்கு அங்கே இரு தமிழ் தேசிய அமைப்புகள் நூல் எரிப்புப் போராட்டம் நடத்தினர். அந்த இரு இயக்கத்தினரும் ஒரு துண்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அது என் கையில் மார்ச் 1ம் தேதியே கிடைத்தது. எனது வழக்கப்படி அந்த துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல விசயங்களில் ஐந்து விசயங்கள் மட்டும் அடிக்கோடிட்டு இதற்கு தங்களால் விளக்கம் கூற முடியுமா? ஏன்று கேட்டு நானே கையெழுத்திட்டு, எனது கைபேசி நம்பரையும் குறிப்பிட்டு அறிவொளிக்கு ஸ்பீடு போஸ்டில் அனுப்பி இருந்தேன். அவர் ஒன்றும் என்னைக் கைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நூல் எரிப்பு போராட்டக்காரர்களுக்கு வாழ்த்துக் கூறவே நான் சென்றிருந்தேன். அங்கே அரை டஜன் போலீஸ் சி.ஐ.டிக்கள், ஏ.சி, மேலும் அரை டஜன் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கவே-எனக்கும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆர்வம் பீறிட்டு விட்டது.
அந்த நூல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஐந்தே ஐந்து பேர்கள்தான். எல்லாருமே என் தோழர்கள் தான். ஒருவர் அ.சி.சின்னப்பத்தமிழர். இன்னொருவர் விடுதலைச் சிறுத்தைக் கட்சி பிரமுகரான தோழர் நந்தன். இன்னுமொருவர் ஆய்வாளர், முனைவர் அகத்தியதாசன். இன்னொருவர் புன்செய் அரசன். இன்னொருவர் நந்தனோடு வந்திருந்த நண்பர்.போராட்டம் தொடங்கியது. முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. “அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் தோழர் கருப்பன் சித்தாத்தன்” இப்போது உரை நிகழ்த்துவார் என்று என்னைக் கேட்காமலேயே அறிவித்து விட்டனர் போராட்டக்காரர்கள். 150க்கும் மேற்பட்ட காவலர்கள் இளைஞர்கள் என் உரையைக் கேட்க ஆர்வப்பட்டதை அவர்களின் முக மலர்ச்சியை பார்த்து தெரிந்து கொண்டதால் - எனது கவித்துவமான, நறுக், நறுக்கென்ற கூர்மையான உரையை நான் தொடர்ந்து கொண்டே செல்ல காவல் துறை இளைஞர்களுக்கு ஒரே முக மலர்ச்சி. இது முக்கியமில்லை. நூலகத் துறை இயக்குநரின் அலுவலகத்தின் உள்ளே இருந்து பத்துப் பதினைந்து நூலகத் துறை ஊழியர்கள் ஓடடோடிவந்து என் கையைப் பிடித்து குலுக்கோ குலுக்கு என்று குலுக்கிட எனது உரை நிகழ்ந்தது.
நூலகத் துறை இயக்குநர் அறிவொளியை வெளுத்துக் கட்டிய என்னை , நூலகத் துறை இயக்குநர் அலுவலக நுழைவாயிலிலேயே ,அங்கே பணி செய்கிற ஒரு டஜன் ஊழியர்கள் என் கையைப் பிடித்து குலுக்கிறார்கள் எனில் - அவர்களின் புண்பட்ட மனதிற்கு எத்தனை பெரிய அருமருந்தாக எனது உரை இருந்திருக்க வேண்டும். அன்று மாலை 5 வரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் எங்களை உட்கார வைத்திருந்தனர். ஆன்று மதிய உணவை ஏதோ நட்சத்திர ஓட்டலில் இருந்து வரைவழைத்து தந்தனர்.
கடைசி கடைசியாக ஒரு விசயம் பாக்கி இருக்கிறது. பொது நூலகத் துறைக்கு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட ஒரு தேர்வுக்குழு இருக்கிறதாம். அதில் 12 உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். இதில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் உள்ளதாம். நீங்களே அந்த இணைய தளத்திற்கு சென்று கண்டு பிடித்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் பழனிச்சாமி என்று ஒருவர் இருக்கிறாராம். இளையபாரதி என்று ஒருவர், கவிஞர் செங்குட்டுவன் இருக்கிறார்களாம். இவர்கள் யார் என்பது இப்போது பிரச்சினை இல்லை. இவர்களில் ஒருவர் கூட நூல்கள் தேர்வு செய்ய நூலகத்திற்கு வருவதே இல்லையாம். இவர்கள் தேர்வு செய்யும் நூல்கள் பட்டியலை அவரவர் வீடுகளுக்கு கொடுத்தனுப்பி விடுகிறார் இயக்குநர். இவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே தான் நூல்களை தேர்வு செய்கிறார்களாம். இவர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாம்.
இவர்கள் தொடர்பாக ஒரு வெட்கக்கேடு இது. இயக்குநர் அலுவலகத்திற்கே வராத “மாட்சிமைதங்கிய” இந்தக் குழு உறுப்பினர்கள் பெயரில் பல லட்சங்களை அறிவொளி சுருட்டி இருக்கிறார். இவர்களுக்கு உணவு அளித்த வகையில் செலவு எனறு கணக்கெழுதி. இந்தச் செலவு கணக்கு குறித்தும் ஒரு தகவல் அறியும் உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது நூலகத் துறை இதற்கு அளித்துள்ள தகவல், “இவர்களுக்கு தீனி வாங்கிப் போடப்பட்ட கணக்கை கணக்கிட முடியவில்லை” அப்படியானால் செரிமானம் ஆகவே ஆகாத அளவிற்கும், கணக்கிடவே முடியாத அளவிற்குமா தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தீனி வாங்கிப் போடப்பட்டிருக்கிறதா?
இப்படியெல்லாம் தனிச்சையாகவும், முறைகேடாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற அறிவொளி பதிப்பாளர் வாரியத்தின் தலைவரல்ல. அவர் ஒரு சாதாரண வாரிய உறுப்பினர் மட்டும் தான். வரியத்தின் தலைவர் தங்கம் தென்னரசு தான். வாரியத்தின் எல்லா செயல்பாட்டிற்கும் பொறுப்பேற்க வேண்டியவர் தம்பி தங்கம் தென்னரச மட்டும் தான். வரும் தேர்தல் களத்தில் அவர் போட்டி இடும் தொகுதியில் 10 கூட்டங்களிலாவது இதை உரக்க கேட்பேன்.
பராசக்தி படத்தில் கலைஞரே எழுதிய உரையால் இது. “கோயில் தவறல்ல கோயில் பூசாரியாக ஒரு காமுகனே இருப்பதுதான் தவறு” பொது நூலகத் துறையின் இப்போதைய இயக்குநர் அறிவொளி அத்தகைய மோசடி பூசரி தான்.
நேற்று (9.3.2011) தனது பள்ளிக் கல்வித் துறை சாதனை குறித்து பீற்றி இருக்கிற முதல்வர் கலைஞர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிற தொல்காப்பிய பாடல் இது,
“ குறிஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சல் அழகும் அழகல்ல.
நெஞ்சத்து நல்லம்யாம் என்னும்
நடுவு நிலமையால்
கல்வி அழகே அழகு”
கலைஞரே நெஞ்சில கை வைத்துச் சொல்லுங்கள், உங்கள் ஆட்சியில் நூலகத் துறை மெச்சும்படியாகவா இருக்கிறது?
கடைசி கடைசியாக முத்தாய்ப்பாக நாம் குறிப்பிடுவது இதைத்தான், முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்படுவதில் விருப்பபடுகின்ற முதல்வர் கலைஞரின் கடைசி ஐந்து வருட கால ஆட்சியிலும் நமது பொது நூலகத் துறை இருளடைந்தே கிடந்திருக்கிறது என்பது ரொம்ப பெரிய சோகம்.
கலைக்கோயில் அவர் கலைமகளை அவர் பிரதிஸ்டை செய்யவில்லை. தில்லாலங்கடி துர்தேவதைக்கே எல்லா பாத பூஜைகளையும், ஆதாரதனைகளும் செய்திருக்கிறார். அதாவது சினிமாத் துறைக்கு.

No comments:
Post a Comment