தன்னை ‘ராஜராஜசோழன்” என்று உருவகப்படுத்திக்கொள்வதை போலவே- தன்னை இன்னொரு ‘கட்ட பொம்மனாக” உருவகப்படுத்திக் கொள்வதற்காகவே 1974-ல் கருணாநிதி பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டையைளக்கட்டினார்.
இதற்கு அப்போதைய சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களாக இருந்த மணலிக்கந்தசாமியும், ஏ.கே. சுப்பையாவும், கே. சுப்புவும் ஒரு காரணம். அப்போது உப்பு பெறாத ஒரு நிலச்சீர்திருத்தச்சட்டத்தை கருணாநிதி நிறைவேற்றி இருந்தார். ‘பல்லாயிரம் பேர்கள் ரத்தம் சிந்தி நிறைவேற்றி இருக்கவேண்டிய அந்த நிலச்சீர்திருத்தச்சட்டத்தை ஒரு துளி மையால் கருணாநிதி நிறைவேற்றி இருக்கிறார்”; என்று மணலி கந்தசாமி அப்போது பிதற்றி இருந்தார். ‘ கருணாநிதியின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த காகிதங்கள் ‘ஆய்”; துடைக்கக்கூட பயன்படவில்லை.இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த மூன்று கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களும் தி.மு.க-வில் கரைந்தனர்.