Tuesday, 5 April 2011

பாஞ்சாலங்குறிச்சி; வெல்லாத வீரம்! பொல்லாத சோகம்!!

தன்னை  ‘ராஜராஜசோழன்” என்று உருவகப்படுத்திக்கொள்வதை போலவே- தன்னை  இன்னொரு ‘கட்ட பொம்மனாக” உருவகப்படுத்திக் கொள்வதற்காகவே 1974-ல் கருணாநிதி பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டையைளக்கட்டினார்.

இதற்கு அப்போதைய சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களாக இருந்த மணலிக்கந்தசாமியும், ஏ.கே. சுப்பையாவும், கே. சுப்புவும் ஒரு காரணம். அப்போது உப்பு பெறாத ஒரு நிலச்சீர்திருத்தச்சட்டத்தை கருணாநிதி நிறைவேற்றி இருந்தார். ‘பல்லாயிரம் பேர்கள் ரத்தம் சிந்தி நிறைவேற்றி இருக்கவேண்டிய அந்த நிலச்சீர்திருத்தச்சட்டத்தை ஒரு துளி மையால் கருணாநிதி நிறைவேற்றி இருக்கிறார்”; என்று மணலி கந்தசாமி அப்போது பிதற்றி இருந்தார். ‘ கருணாநிதியின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த காகிதங்கள் ‘ஆய்”; துடைக்கக்கூட பயன்படவில்லை.இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த மூன்று கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களும் தி.மு.க-வில் கரைந்தனர்.
           
1974-ல் கட்டபொம்மன் சந்ததியினர் 202 குடும்பங்களுக்கு கட்டிக்கொடுத்த வீடுகள் 36 வருடங்களுக்கு முன்பாக சின்னதாகத்தான் இருந்தன. இன்றோ அவைகளும் இடிந்து சிதைந்து நொருங்கி ‘பன்றிக் கொட்டில்” போன்று அறுவறுப்பாய் இருக்கின்றன. இதன் அருகிலேயே சமீபத்தில் சுந்தரலிங்கம் சந்ததியினர் 250 குடும்பங்களுக்கு அரசு கட்டிக்கொடுத்திருக்கிற கான்கிரிட் வீடுகள் கண்களை பறிக்கின்றன. கட்டபொம்மன் சந்ததியின் வீடுகளோ 36 வருடங்களுக்கு முந்தைய வீடுகள். இந்த வீடுகள் இன்று மக்கள் வசிக்கிற வீடுகள் அல்ல- ‘பன்றிக் கொட்டில்கள்”- கட்டபொம்மன் சந்ததியினர் அவமானத்தில் தவிக்கிறார்கள். ஒரு தேசபக்த பரம்பரையை இப்படி அவமானத்தில் தத்தளிக்கவிட்டிருக்கின்றார் கருணாநிதி. மே-15ல் பதவி ஏற்கிற அரசு இவர்களுக்கும் நவீன கான்கிரிட் வீடுகள் உடனடியாக கட்டித்தர வேண்டும். கருணாநிதியே முதல்வாராக வந்தால் இது நடக்கவே நடக்காது.

கருணாநிதி எத்தனை நல்லவர் பாருங்கள்;  கட்டபொம்மன் மட்டும் வெள்ளையனுக்கு வளைந்து கொடுத்திருந்தால் - கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன். தலைமை அமைச்சர் தானாதிபதிபிள்ளை, சுந்தரலிங்கம், அஞ்சா நெஞ்சர்கள் அருந்ததியின மாவீரர்கள் சட்டி, பொட்டி, ஒண்டிவீரனின் வாரிசுகள்-மொத்தத்தில் இன்றைய நிலையில்-இவர்களின் பேரன் பேத்திகள் 5 ஆயிரம் குடும்பத்தினர் செல்வ செழிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

            தொண்டைமான் பரம்பரையினர் இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு உரியவர்கள். எட்டப்பன் பேரன் பேத்திகளுக்கு திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையேரத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பில் வணிக வளாகங்கள். திரையரங்குகள். நூற்றுக் கணக்கான  பங்களாக்கள்.

            ஆனால் கட்டபொம்மனோ வெள்ளையனுக்கு ‘குனிந்து” காட்டவில்லை. விளைவு? அவனுடைய வாரிசுகள்- ஊமைத்துரையின் வாரிசுகள், தலைமை அமைச்சர் தானாதிபதி பிள்ளையின் வாரிசுகள், முன்குறிப்பிட்டுள்ள அவனின் அனைத்து தளபதிகளின் அனைத்து வாரிசுகள்- இவர்களின் பேரன், பேத்திகள் 5 ஆயிரம் குடும்பத்தினர் இன்றோ தூத்துக்குடியை சுற்றியுள்ள உப்பளங்களில் உப்பளத் தொழிலாளர்களாய்,விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி தாலுகா கிராமங்களின் விவசாயிகளின் மகசூலை காவல் காக்கும் ‘கொண்டி” காவல்காரர்களாய். (இது பற்றி ‘ஜே.பி” என்கிற பெயரில் அறியப்பட்டிருக்கிற பா.ஜெயபிரகாஷ் அவர்களிடம் கேளுங்கள். உங்களுக்குகண்ணீர் வரும். இன்றோ அவர்களில் பல ஆயிரம் பேர்கள் செக்யூரிட்ரிகளாய். இவர்கள் ‘ சலாம்” போட்டு ‘டிப்ஸ்” வாங்குகிறவர்கள்.கருணாநிதி நல்லவராக இருந்திருந்தால் தமிழனாக இருந்திருந்தால்- இவர்கள் ஐந்தாயிரம் குடும்பத்தினரும்-சுதந்திர போராட்ட தியாகிகளாய்- அறிவிக்கப்பட்டு அரசின் சலுகைகளை பெறுவதில், முன்வரிசையில் இருந்திருக்க செய்திருக்க வேண்டும் செய்யவில்லை கருணாநிதி.
           
            இதைவிட்டுத் தொலையுங்கள் நிகழ்காலத்திற்கு வாருங்கள் கருணாநிதியால் கட்டபொம்மன் வாரிசுகள் என கண்டறியப்பட்டு மானியம்1974ல் இருந்து 250 ரூபாய் வழங்கப்பட்டவர்கள் 10 பேர்கள். அவர்களில் இறந்து போன 5 தியாகிகளின் வாரிசுகள் குடும்பத்தினருக்கு மானியம் வழங்கப்படவே  இல்லை. கருணாநிதிக்குத்தான் என்னா குருர புத்தி?

            கருணாநிதி கட்டபொம்மன் சந்ததியினர் 202 குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் என வழங்கிய 606 ஏக்கர் நிலங்களும் இப்போது இவர்களிடம் இல்லை. இந்நிலங்களோ விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களும் அல்ல. சரள் பூமி. இந்நிலங்களிலும் முக்கால்வாசி நிலங்கள் பறிபோய்விட்டன. இவர்களின்  வறுமையை பயன்படுத்தி உள்ளுர் அரசியல் பெரும்புள்ளிகள் அடிமாட்டு விலைக்கு இவர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டனர். அந்த பெரும்புள்ளிகள் இந்த நிலங்களில் குவாரி அமைத்து கோடிகோடிகளாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பெரும்புள்ளிகள் எவர்? இதே ஒட்டப்பிடாரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜன் மற்றும் ஒட்டபிடாரம் முன்னால் எம்.எல்.ஏ ராஜமன்னார். இவர்களிடமுள்ள நிலம் தியாகிகள் நிலம். இதை வாங்கவோ, விற்கவோ எவருக்குமே அதிகாரமில்லை. இந்நிலங்களை மீட்டி மீண்டும் பழைய உரிமையாளர்களின் பேரன், பேத்திகளின் பெயரால் உரிமை தர வேண்டும்.

            கட்டபொம்மனின் பிரம்மாண்ட கோட்டையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மற்றும் கட்டபொம்மனின் தளபதிகளான வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம், அமைச்சர் தானாதிபதி பிள்;ளை ஆகியோருக்கு ஆளுயுயிர கம்பீரமான திரு உருவச்சிலை அமைத்தார் கருணாநிதி. இது மட்டுமின்றி தூத்துக்குடி மதுரை ரோட்டிலிருந்தும், ஒட்டப்பிடாரத்திலிருந்தும் பாஞ்சாலக்குறிச்சி செல்ல ரோடுகள் போட்டுத் தந்தார். இவ்விரு ரோடுகளின் வழியாகவும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அரசு பஸ்கள் விட்டார். மேலும் ஒட்டப்பிடாரத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிவரையுள்ள இரண்டு கிலோ மீட்டர் தூர ரோட்டில் வழி நெடுக கட்டபொம்மன், ஊமைத்துரை, தளபதிகள் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன், அமைச்சர் தானாதிபதி பிள்ளை ஆகியோரின் நினைவாய் பிரமாண்டமான கவின்மிகு நிiiவு வளைவுகள் அமைத்தார். இவ்வளவு பிரம்மாண்டங்களை செய்த முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி-எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருக்குச்சாலையிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிரோடு பிரியும் குருக்குச்சாலை சந்திப்பில், ‘ சரித்திர நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிரமாண்ட கோட்டை  எழுப்பிய வரலாற்று நாயகர் டாக்டர். கலைஞர். மு. கருணாநிதி தோரணவாயில்” என்கிற பிரமாண்ட நினைவு வளையத்தையும் தனக்குத்தானே நிறுவிக்கொண்டார். இவரும் ஒரு வரலாற்று நாயகர்என்று பீற்றிக்கொள்ளவே கருணாநிதியின் இந்த மலிவான ஏற்பாடு.
           
 கட்டபொம்மனின் ஒரு தளபதியான வெள்ளையத்தேவனின் வாரிசுதார்களின் விருப்பப்படி தூத்துக்குடி, நெல்லை நெடுஞ்சாலையிலுள்ள வல்லநாட்டில் மணிமண்டபம் கட்டித்தந்திருக்கிறார் கருணாநிதி. ஒரே ஒரு விசயத்தை மட்டும் கருணாநிதி படு ஞாபகமாய் வேண்டுமென்றே மறந்தார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் அஞ்சா நெஞ்சர்களான கட்டபொம்மனின் இரு தளபதிகளுக்கு ஆளுயுயிர முழு திருவச்சிலைகள்வைக்கவும், இவ்விரு தளபதிகளின் பெயரால் நினைவு வளைவுகள் எழுப்பவும் மறந்தார்.  கருணாநிதி. கூடவே இவ்விரு வீரத்தளபதிகள் இருவரின் சந்ததியினர் 200 க்கும் மேற்பட்டகுடும்பத்தினருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் கட்டித்தரவும் மறந்தார்.
           
 கட்டபொம்மனின் உளவுப்படை தளபதிகள் என வரலாற்றில் வைர வரிகளால் பொறிக்கப்பட்டிருக்கிற இந்த இரு அஞ்சா நெஞ்சர்களின் நினைவாய் மட்டும் எந்த நினைவுச் சின்னமும் அமைக்க படுஞாபகமாய் மறந்தார். கருணாநிதி செய்திருக்கிற இந்த பொல்லாத அநீதி  அடுத்தடுத்த பத்திகளில் வருகிறது  தொடர்ந்து வாசியுங்கள்.
       
   இந்தாண்டும் பாஞ்சாலக்குறிச்சி கோட்டையின் மூலையில் கருணாநிதி அரசின் சார்பில் கட்டபொம்மன் விழா மேடை என்கிற பெயரில் மே-13 ந் தேதி மாலை 5 மணிக்கு தலையாரிகளால் அவசர அவசரமாய் ‘கருமாதி” பந்தலே போடப்படுமா?  தெரியவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அதே கோட்டைத்திடலில் ஒவ்வொருஆண்டும் பிரமாண்டமான மேடைகளை பார்த்து நினைவில் வைத்திருப்பவர்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட மக்கள். ஆட்சியின் கடைசி நாளில் இருக்கிற  கருணாநிதி இந்தாண்டிலும் அரசின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் நடத்தப்போவது கட்டபொம்மனின் நினைவு விழாவா? அல்லது கருமாதித்திதியா? என்பது மே -13ந் தேதி தான் தெரியவரும்.
            இந்தாண்டு வழக்கம் போல் சித்திரை கடைசி வெள்ளி, சனி இரு நாட்களும் (மே 13,14) பாஞ்சாலங்குறிச்சியில் அரசின் சார்பில் கட்டபொம்மன் விழா நடக்க போகிறது. வழக்கமாய் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மக்கள் கூடுகிற பொருவிழாவிது. விழா நடைபெறும் இரு நாட்களும் இந்த 2 லட்சம் மக்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்கி இருப்பார்கள். ஏனென்றால் இவ்விரு நாட்களில் தான் கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கும் கொடைவிழா. தானாய் கூடுகிற பெருங்கூட்டமிது.
            பெயர் தான் அரசு விழா உண்மையில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கருணாநிதி அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு வருகிற இருநாள் விழாக்களுமே கருமாதித்தனமாகவே எடுக்கப்பட்டு வருகிறது. கட்டபொம்மனின் விழாவை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி புறக்கணித்தே வருகிறது.
            இவர்களுக்கு அரியனைதானே முக்கியம்? 2009 மே 15ந்தேதி முள்ளிவாய்க்காலில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட டெல்லிக்கு கங்கானி வேலை பார்த்தவர்தானே இந்த துரோகி?
            அமரர் எம்.ஜி.ஆர் இறந்ததற்கு பிறகு நடந்த முதல் தேர்தலில் (1987) வெற்றி பெற்று கருணாநிதி முதல்வர் ஆனார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே அப்போது கருணாநிதி முதல்வராய் இருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளிலும் அரசின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் விழா மிகசிறப்பாகத்தான் நடைபெற்றன. இந்த விழாவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கு கொண்ட இரு அமைச்சர்கள் இரண்டாம் ஆண்டு கட்டபொம்மன் விழாவின் போது அமைச்சர் பதவியில் இல்லை. ஊழலுக்காகவோ, நிர்வாக வசதிகளுக்காகவோ, இவர்கள் முதல்வர் கருணாநிதியாலேயே மாற்றப்பட்டிருந்தனர்.          இரண்டாம் ஆண்டு கட்டபொம்மன் விழாவில் பங்கேற்ற வேறு இரண்டு அமைச்சர்கள் அடுத்தாண்டு விழாச்சமயத்தில் பதவியில் இல்லை. மூன்றாம் ஆண்டிலோ பிரதமர் சந்திர சேகரால் தமிழக தி.மு.க அமைச்சரவையே மொத்தமாய் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதெல்லாம் அரசியல் தட்பவெப்பத்தால் இயற்கையாகவே நடந்த சம்பவங்கள்.
            தி.மு.கவினருக்கு எந்த ஒரு கொள்கையையும் கைவிட ஏதேனும் ஒரு நொண்டி சாக்குதானே தேவை? ‘கட்டபொம்மன் விழவிற்கு சென்றால் கட்டபொம்மன் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் பதவிகளை பறித்துவிடுவார்” என்கிற கட்டபொம்மன் பற்றிய மூடநம்பிக்கையை தி.மு.க அமைச்சர்களும், அவர்களின் தொண்டர்களும் அவர்களாகவே ஒரு காரணத்தைக் 1989ல் கண்டு பிடித்துக்கொண்டுவிட்டனர்.
            1990ல் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக இந்த மூடநம்பிக்கையில்தான் இன்றுவரையும் தி.மு.க வின் முன்னாள் இந்நாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் முழ்கிக்கிடக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
            இதற்குபிறகும் ஒவ்வொரு ஆண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு அரசின் சார்பில் தொடர்ந்து இருநாள்விழா நடத்தப்பட்டுத்தான் வருகுpறது ‘கருமாதி” தனமாய். ஆனால் இருநாள் விழாவிற்கும் மாவட்ட ஆட்சிதலைவர் தலைமைவகிக்கிறார் என்றும், மூன்று நான்கு மாண்புமிகு அமைச்சர்கள், நான்கைந்து எம்.பி.க்கள், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த ஒரு டஜன் எம்.எல்.ஏக்களும், விழாவில் பங்கேற்கிறார்கள் என்றும் வண்ணமயமான நான்கு பக்க நிகழ்ச்சிநிரல் கருணாநிதி அரசால் அச்சிடப்படும். ஆனால் கட்டபொம்மன் விழாவிற்கு முதல்நாள்வரை இந்த அரசின் சார்பிலான நிகழ்ச்சிநிரல் அழைப்பிதழை எவரிடத்தும் வெளியே காட்டவே மாட்டார்கள் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள்பத்தி பிரிக்கவும் ஏற்கனவே குறிப்பிடபட்டுள்ளபடி விழா நாளன்று கோட்டை திடலின் ஒரு மூலையில் ஒரு கருமாதி பந்தல் சைசிற்கு ஒரு மேடை அமைக்கப்படும். மேடையை சுற்றிலும் ஆள் உயர நீண்ட தடிகளை ஏந்திய கூன் விழுந்த 200 பேர்கள் தலைப்பாகை கட்டி ஒப்புக்கு சப்பாணியாய் நிற்பார்கள். இவர்கள் யார் என்றால் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று தாலுகாகளில் அடங்கிய நூற்றுக்கணக்கான கிராமங்களின் தலையாரிகள். இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்கிறீர்களா? கட்டபொம்மன் முதல்நாள்; விழாவிற்கு நிஜத்தில் வழக்கமாய் தலைமைதாங்கப்போகிறவர் கோவில்பட்டி  சப்-கலைக்டர். இரண்டாம் நாள் விழாவிற்கு தலைமைதாங்குபவர் ஆவரங்காடு (பாஞ்சாலங்குறிச்சிகிராமம் இந்த ஊராட்சிக்குள் அடங்கியது) பெண் ஊராட்சி தலைவி.  பாவம் இவருக்கு மேடை பேச்சுவராது. மேடையில் (கருமாதி பந்தலில்) நாற்காலியில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருப்பார். அi;றைய இரண்டாம் நாள் விழாவிற்கு சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கிற பிரமுகர் ஒட்டப்பிடாரம் தாசில்தார். கருமாதித்திதியை நடந்த கலைக்டர் எதற்கு? அமைச்சர்கள் எதற்கு? உள்ளுர் சொறிபாப்பன்கள் இரண்டுபேர் போதுமில்லையா? கட்டபொம்மன் ஓன்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இல்லையே. கட்டபொம்மன் சந்ததியினரிடம் வாக்கு வங்கி இல்லையே.
            தி-மு-க ஆட்சியாளர்கள் கட்டபொம்மன் விழாவை தொடர்ந்து புறக்கணித்து  வருவதற்கு  ஒரே காரணம்; கட்டபொம்மன் விழாவிற்கு சென்றால் பதவி பறிபோய் விடும் என்கிற ஒரே மூடநம்பிக்கையே காரணம்.

            தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரே மே 1 ந் தேதியன்றே  லீவு போட்டு விட்டு எங்கோ பறந்து விடுவார் ஒட்டபிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.ராஜனுக்கு பாஞ்சாலங்குறிச்சி தான் (கவர்ணகிரி) சொந்த ஊர். இவரும் இன்று பார்த்து காணாமல் போய் விடுவார். விளாத்திகுளம்  எம்.எல்.ஏ சின்னப்பனுக்கு சொந்த ஊர் இங்கே இருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள வேலாயுதபுரம் தான். இவரும் விழா நாளன்று காணாமல் போய் விடுவார். இந்த தோர்தலில் இவருக்கு தேர்தல் டிக்கட்டே வழங்கப்படவில்லை

            உயிரோடு இருந்தவரை அமரர் எம்.ஜி.ஆர் கட்டபொம்மன் இரு நாள் விழாவை தனது 12 வருட கால ஆட்சிக்காலத்தில் ஒரு வருடம் கூட புறக்கணித்ததே இல்லை. அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களான கம்யூனிஸ்ட் தலைவர் கோவில்பட்டி  எம்.எல்.ஏ அழகர்சாமி விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஆர்.கே.பொருமாள், அ.தி.மு.க நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரைக் கொண்ட விழா கமிட்டியை அமைத்து’எத்தனை லட்சரூபாய் செலவானாலும் சரி, கட்டபொம்மன் விழாவை பிரமாண்டமாக நடத்துங்கள்” என்று கூறி விடுவார் எம்.ஜி.ஆர். அது மட்டுமின்றி தனது முழு அமைச்சரவையையும் விழாவில் பங்கேற்க பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பி விடுவார். எம்.ஜி.ஆர். காலத்தில் தமிழக சட்ட பேரவை சபாநாயகர் தான் கட்டபொம்மன் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்பார். நிறைய  அமைச்சர்கள் பங்கேற்பதால் ஒவ்வொரு அமைச்சரோடும் அவர்களுக்கு நெருக்கமான ஒரு டஜன் எம்.எல்.ஏ எம்.பிக்களும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஞ்சாலங்குறிச்சி விழாவிற்கு வந்து விடுவார்கள் இவர்கள் இரு நாட்களும் பாஞ்சாலங்குறிச்சியிலேயே தங்கி இருப்பார்கள்.

            1977ல் இருந்து 1987 வரை  எம்.ஜி.ஆர் அமைச்சரவை முழுக்கவுமே ஒவ்வொரு ஆண்டும் முழுசாய் கட்டபொம்மன் விழாவில் பங்கேற்றிருக்கிறது. இது மட்டுமா? கட்டபொம்மன் விழாவை தங்களின் சொந்த மகளின் திருமணத்தைப் போல் ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொண்டு நடத்திய மும்மூர்த்திகளான கோவில்பட்டி அழகர்சாமி, கருப்பசாமி பாண்டியன்,  ஆர்.கே.பொருமாள் ஆகியோர் தொடர்ந்து 15 வருடங்களாக அவரவர் தொகுதியில் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டு  எம்.எல்.ஏக்களாக பதவி வகித்தனர். இவர்கள் மூவரின் பதவியை மட்டும் கட்டபொம்மன் பறிக்கவில்லையே  ஏன்? இது மட்டுமல்ல் இம்மூவரும் அவரவர் தொகுதி மக்களின் இதயங்களில் இன்றும் பெருமைக்குரிய  இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்களே. கட்டபொம்மன் இவர்கள் மூவரையும் ஒன்றுமே செய்யவில்லையே. இம்மூவரில் இப்போது உயிரோடு இருப்பவர் கருப்பசாமி பாண்டியன் ஒருவர் மட்டும் தான். அரசியல் தட்ப வெப்ப நிலையால் தான் இவர் இன்று ஒளிமங்கி இருக்கிராரே தவிர, இவர் மீது ஒரு மாசு மரு கற்பிக்க முடியுமா?
            இது தான் இச்செய்தி கட்டுரையின் ஹைலைட்டான விசயம். கட்டபொம்மனின் உளவு படைத்தளபதிகள் அஞ்சா நெஞ்சர்களான சட்டி, பொட்டி ஆகிய மாவீரர்கள் இருவரின் சந்ததியினர் 200 குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் கட்டிதராமல் கருணாநிதி பெரும் அநீதி இழைத்திருக்கிறார். ஆனால் இதே  பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர் 202 குடும்பங்களுக்கு வீடுகளும் கட்டித்தந்து தலா 3 ஏக்கர் என 606  ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளார் கருணாநிதி கட்டபொம்மனின் இன்னொரு தளபதியான சுந்தரலிங்கம் சந்ததியினர் 250 குடும்பங்களுக்கு இதே பாஞ்சாலங்குறிச்சியில் பிரமாதமான வீடுகளோடு தளபதி சுந்தரலிங்கத்தின் நினைவாக மணி மண்டபமும் கட்டிதந்துள்ளார் கருணாநிதி. கட்டபொம்மனின் இன்னொரு தளபதியான வெள்ளையத்தேவனுக்கு வல்ல நாட்டில் 50 லட்சரூபாய் செலவில் அழகான மணி மண்டபமும் கட்டிதந்துள்ளார் கருணாநிதி அது மட்டுமல்ல. கட்டபொம்மனை பெருமைப்படுத்தி பிரம்மாண்டமான கட்டபொம்மன் கோட்டை. இக்கோட்டைக்குள் கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன், அமைச்சர் தானாதிபதி பிள்ளை ஆகியோரின் ஆளுயுர சிலைகளும் உண்டு.  இவர்கள் அனைவருக்கும் இங்கே பிரம்மாண்ட நினைவு வளைவுகளும் உண்டு.
ஆனால் கருணாநிதி   கட்டபொம்மனின் உளவு படைத்தளபதிகளான சட்டி, பொட்டி ஆகிய இரு அஞ்சா நெஞ்சர்களின் நினைவாய் மட்டும் பாஞ்சாலங்குறிச்சியில் எந்த நினைவு சின்னமும் அமைக்கவில்லை. இவர்களின் சந்ததியினருக்கு பாஞ்சாலங்குறிச்சியில் கருணாநிதி வீடுகள் கட்டித்தரவில்லை. இவர்களின் பெயரால் நினைவு மண்டமும் கட்டிதரவில்லை. இவர்களுக்கு இங்கே ஒரு நினைவு வளைவு கூட  கிடையாது. சட்டி, பொட்டி ஆகியேருக்கு மட்டும் கருணாநிதியால் ஏன் இந்த புறக்கணிப்பு? கருணாநிதிக்கு  ஏன் இந்த ஓரவஞ்கனை? ஏன் இந்த துரோகம்? சட்டி, பொட்டி ஆகிய இரு அஞ்சா நெஞ்சர்களும் அருந்ததியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணம் மட்டும் தான். உத்தமபுரம் தீண்டாமை சுவர் இடிந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் பாஞ்சாலாங்குறிச்சியில் மட்டும் அருந்ததியினருக்கு எதிராக தீண்டாமை நெடுஞ்சுவர் நிலைத்து நிற்கிறது. இது ஒன்றும் அருந்ததியின மக்களுக்கு மட்டும் இழைக்கப்படுகிற அவமானமல்ல. நமக்கு நாமே இழைத்துக்கொள்கிற இழிவு இது. நாமா நாகரீகமானவர்கள்?
எழுதவே நெஞ்சம் கொதிக்கிறது. சட்டி, பொட்டி ஆகிய இருவர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும், ஈடேது? இணையேது? நமது உடன் பிறப்புக்கள் அருந்ததியினருக்கு இடமில்லாத - உரிய மரியாதை அளிக்காத - நாமெல்லாம் மனித ஜென்மங்களா? நாமெல்லாருமே மனுவின் கொள்ளு பேரன் பேத்திகளே. கலைஞரே மனுவின் நேரடி வாரிசு.
பதவியை பறித்து விடுவார் கட்டபொம்மன் என்கிற கருணாநிதியின் மூடநம்பிக்கையின் எதிர் விளைவுதான் பெரும் சோகம்.
கட்டபொம்மனின் நேரடி வாரிசு கல்லூரணி ஜமீன்தார் ராஜகோபாலசாமி உயிரோடு இருந்தவரையும், புதூர் நல்லாசிரியர் முருகையா அவர்கள் துடிப்போடு இருந்தவரை-அவர்கள் இடதுசாரி இயக்கங்களோடு கொண்டிருந்த நெருக்கமான தோழமையினால் கட்டபொம்மன் விழா மேடை ஒவ்வொரு ஆண்டும்; மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மேடையாக -திப்பு, மருது சகோதரர்கள், திரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால்சாமி நாயக்கர், ப+லிதேவன், ஒண்டிவீரன் ஆகிய பழைய விடுதலைப்போரட்ட மரபுகளை மீண்டும் தட்டி எழுப்பிடும் பாசறையாக இருந்து. இன்றோ பரிதாபம்
ஊமைத்துரையின் வாரிசு கல்லுரணி ஜமீன்தார் ராஜகோபால்சாமி உயிரேடு இருந்தவரை கடைசிவரை செய்ததைப்போல நெல்லை ஆராய்ச்சி பேரறிஞர் நா. வானுவாமலையின் மாணவர்கள்;-தூத்துக்குடி பேராசிரியர் சிவசு, பேரறிஞர் தோதாத்திரி, மனோன்மனியம் பல்கலைகழக  வரலாற்றுத்துறை பேராசிரியர் மணிநாத், மதுரை காமராஜர் பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முத்துமனோகரன், காந்திகிராமம் பேராசிரியர் முத்தையன் கே.சுப்பு- சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. தொழில் அதிபர் அனந்தராமன்  ஆகியோரை பங்கேற்கச்செய்து 13,14 பாஞ்சாலங்குறிச்சி விழா மேடை இனிமேலாவது பழைய சுதந்திர போராட்ட மரபை கட்டிகாப்பதாக இருக்க செய்யவேண்டிய பெரும் கடமை கட்டபொம்மன் சந்ததியினருக்கு உள்ளது என்பதை அவர்கள் என்று உணரபோகிறார்களோ தெரியவில்லை.

                        இன்றோ ‘மானாட மயிலாட புகழ்”;  கருணாநிதி தமிழக முதல்வர் இறுக்கையின் கடைசி நாட்களில். இதனால்தான் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் விழா மேடையில்; கட்டபொம்மனுக்கு உணர்வு பூர்வமான வீரவணக்கமில்லை. கருணாநிதியின் 27 வது பேரனுக்கும் 7 ஆயிரம் கோடிரூபாய் சொத்து உள்ளது. கட்டபொம்மன் அவன் தளபதிகளின் பேரன் பேத்திகளோ இன்று பரிதாபகரமான-விளிம்பு நிலை வாழ்வில். ‘பன்றிக்கொட்டில்” என்று எழுதியுள்ள என் கையை எனக்கே வெட்டனும் போல இருக்கிறது. நம் வீரம் எங்கே போனது? முருகபூபதி நீயாவது சொல்லேன். வீரமல்லு நீ சொல்லேன்.

வெள்ளையர்களால் வெல்லாத வீரம், சொல்லாத சோகத்தில்.  பாஞ்சாலங்குறிச்சியோ இன்று இருளில் மூழ்கி.

3 comments:


  1. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Ayurveda
    Ayurveda Resorts
    Ayurveda Kovalam
    Ayurveda Trivandrum
    Ayurveda Kerala
    Ayurveda India

    ReplyDelete
  2. Hii, This is Great Post !
    Thanks for sharing with us!!!!


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai,
    Brand makers in chennai

    ReplyDelete