அக்கணத்தில்த்தான் அவர்களுக்காக என்னை பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அவர்கள் என்னைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அறுபது, எழுபது என்பது வயதுகளைக் கடந்த தாத்தா பாட்டிகள் 30 பேர்கள். மேலும் முப்பது நாற்பது வயதுகளில் இருந்த 25 விதவைப் பெண்கள். ஆக மொத்தம் ஐம்பது, ஐம்பத்தைந்து பேர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்களின் ஒரு நெருங்கிய உறவுக்காரனாய் அறிமுகமாகி இருந்தேன். அந்த ஊரில் 75 ஒட்டர் குடும்பங்கள் தான். ஆனாலும்; இந்த குடும்பங்களில் 25 விதவைகள் 30 முதியோர்கள்.
இவர்கள் விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஒட்டன்காடு வெட்டிகிராம வாசிகள். இவர்கள் “பண்டி”, “கொட்டா” இன தாழ்த்தப்பட்டவர்கள். ஆனால் தமிழக அரசு இவர்களை வகைப்படுத்தி இருப்பதோ மிகவும் பிறப்பட்டோர். பட்டியலில் அதாவது வன்னியர்களுக்கு சமமாய்.
இவர்களுக்கான ஒய்வூதியம் கோரும் விண்ணப்பங்களையும், விதவை உதவித் தொகை கோரும் விண்ணப்பங்களையும் கதிரேசனும், (9787479581) காளிதாசும் மிக மிகக் கவனமாய் நிரப்பிக் கொண்டிருந்தார்கள் கதிரேசன் மாம்பழப்பட்டு அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலுகிறான். காளிதாசும் அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறான். காளிதாசு இந்த வயதிலேயே மிகச் சிறந்த ஒவியன். அந்த ஊர் பள்ளிப்பிள்ளைகளின் பரிட்சை அட்டைகளில் இவன் வரைந்து தந்திருந்த “மீசையுடன் கூடிய பாரதி”, “தாடியுடன் கூடிய வள்ளுவர்” “கழியை ஊன்றி நின்ற அவ்வைப்பாட்டி” இது போன்ற தத்ரூப காட்சிகளை கண்டு பிரமித்தே இந்த இளம் ஒவியனை நான் கண்டு பிடித்திருந்தேன்.
அந்த விண்ணப்பங்களில் முதியோர், விதவை ஆகியோரின் இரு அங்க அடையாளங்கள் நிரப்பப்பட வேண்டும். இதை ஒரு டாக்டரே கண்டறிந்து அந்த விண்ணப்பத்தில் எழுதி கையெழுத்திட வேண்டும். ஒரு ஐம்பது பேர்களிடம் அதுவும் வறிய ஏழைகளிடம் இந்த அங்க அடையாளங்களை கண்டறிந்து எந்த டாக்டர் கையெழுத்திட்டு தருவார்? ஒரு நூறு ரூபாய் இதற்கு கட்டணமாம். ஆனால் திண்டிவனம் டாக்டர் கிருஷ்ணராஜ் கையெழுத்துப் போட்டுத் தர இசைவு தந்திருந்தார். அவர் இதற்காக எனக்கு 10 பைசா கூட தர வேண்டாம் என்று கூறியிருந்தார். இவரை எமக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தவரோ தோழர் டாக்டர் ரவீந்திரநாத்.
இவர் இந்திய சமூக சமத்துவ மருத்துவர் சங்கத் தலைவர். அரசாங்கம் மக்களுக்கான மருத்துவ சேவையை ஒவ்வொன்றாக தனியாரின் கொள்ளைக்கு கொல்லைப் புறமாக தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருப்பதை தன்னையொத்த - சமூக பிரக்னையுள்ள நூற்றுக்கணக்கான டாக்டர்களை ஒன்று திரட்டி சர்வ வல்லமையோடு எதிர்ப்பவர். அம்பலப்படுத்தி வருபவர். இவரை நான் தமிழகத்தின் நார்மன் பெத்யூனாகவே கருதுகிறேன். தொழிலாளி வர்க்கத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும் எதிரான அநீதிகளை கண்டறிந்து அச்சு, இணையதள ஊடகங்களின் மூலமாய் அக்கறையோடும், வலியோடும், அம்பலப்படுத்தி, அவர்களின் பேராட்டங்களுக்கான கருத்தாயுதங்களை மட்டுமே வழங்கிக் கொண்டிருந்த என்னை “இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கம்”;, “சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி, பேராசிரியர்கள் சங்கம்” ஆகியவற்றை அமைக்கத் தூண்டியவரும் இவரே.
எனக்கு இந்த அளவிற்கு- ஒரளவிற்கேனும் அர்ப்பணிப்பு உணர்வு வந்திருக்கிறது எனில். இதற்கு காரணமான முதலாம்மவர்; தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தலைவர் தோழர் ரவி. இன்னொருவர் டாக்டர் ரவீந்திர நாத். காட்டாற்று வெள்ளமாய் கரைபுறடோடிய எனக்கு இருபுறமும் கரைகட்டிய தோழர்கள் இவர்கள்.
அந்த முதியோர்கள், விதவைகள் ஐம்பது பேர்களின் இரு அங்க அடையாளங்களை கண்டுபிடித்து, கண்டுபிடித்து தம்பி சிவசங்கரன் என்னிடம் சொல்ல சொல்ல அதற்கான பதிவேட்;டில் நான் குறித்துக் கொண்டிருந்தேன். இந்த தம்பி சிவசங்கரனுக்கு முப்பது வயது. ஒரு கால் ஊனம். ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் இவனால் நடக்க முடியும் ஆனால் வெகு வேகமாக நடப்பான். மற்றவர்களுக்கு கெல்லாம் வெளியூர்களில் போய் தங்கி வசிக்கிற குடும்பங்களில் உள்ள இருபது வயதிற்கு மேற்பட்டவர்களைத்தான் தெரியும். இவனுக்கோ அந்த ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இரண்டு வயது, ஒரு வயது, ஆறு மாதக் குழந்தைகளின் பெயர்கள் எல்லாம் தெரியும்.
அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்திலும், கல் உடைக்கும் தொழிலாளர் சங்கத்திலும், ஒரு இருநூறு உறுப்பினர்களை சேர்த்திருந்தோம். இதற்கான விண்ணப்பத்தில் உறுப்பினரின் எல்லாக் குழந்தைகளின் பெயர், வயது எல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். இந்த விபரங்களை மணியடித்தாற்போல் டாண் டாண் என்று சொல்லி அசத்திய தம்பி இவர். ஒவ்வொரு நாள் வேலையை முடித்த பின்னும் ஊருக்கு வெளியே சற்று உலாவிட தம்பி.வெங்கடேசன் தம்பி பன்னீர் ஆகியோருடன் செல்வது என் வழக்கம். அப்பொழுதும் இந்தத் தம்பி சிவசங்கரன் எங்களோடு வந்து ஒட்டிக் கொள்வான். ‘தம்பி நீ வேண்டாமடா.. நீ போய் கூட்டத்திற்கு அழைப்பு விடு .. நாங்க அவுட் சைடு போயிட்டு வந்திருதோம்டா” என்று கூறினாலும் அடம்பிடித்து ஒரு காலை இழுத்து இழுத்து எங்களோடு நடந்தே வருவான். ‘நினைவுகள் அழிவதில்லை” நாவலில் வருகிற கையூர் “குருவியான்” வரலாறு முழுக்கவும் தொடர்வார்கள் போலும்.
புன்னப்புழா, வயலாறு கையூரில் மாஸ்டர் ஊர் அடங்கிய பிறகு கையூர் விவசாயிகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூட்டி வைத்து அன்றாட நாளிதழ்களை வாசித்துக் காட்டுவார். இது அந்த ஊர் நிலப்பிரபுக்களுக்குத் தெரிந்து விடும். தவிரவும் கை யூர் விவாசயிகளின் குடிசைகள் அமைந்திருந்த இடம் நிலப்பிரபுவினுடையது. பேப்பர் வாசிக்கத் தடை விதித்து விடுவார் நிலப்பிரபு. ‘அதனால் என்ன. . என் குடிசையில் வந்து பேப்பர் வாசிங்க மாஸ்டர்” என்று கூறி அழைத்துச் செல்வான் குருவியான். கை யர் விவசாயிகள் அன்றாடமும் இரவில் குருவியான் குடிசையில் கூடுவார்கள். மாஸ்டர் பேப்பர் வாசிப்பார். “என் நிலத்துலே வேலை செய்கிற எவனொருவனும் குருவியான் குடிசையில் நடக்கிற பேப்பர் வாசிப்பிறகு போகக் கூடாது” என்று தடைவிதித்து விடுவார் நிலப்பிரபு. “அதனால் என்ன மாஸ்டர். நீங்க பேப்பர் வாசியுங்கள். நான் மட்டும் கேட்கிறேன் என்பான் குருவிளான். பிறகு விவசாயிகள் ஒவ்வொருவராய் அச்சம் நீங்கி பகிரங்கமாகவே பேப்பர் வாசிப்பில் பங்கேற்கத் துவங்கி விடுவார்கள். குருவியான் ஒரு அற்புதமான பாத்திரப் படைப்பு. இந்த ஒட்டர் தம்பி சிவசங்கரன் கற்பனை கதாபாத்திரமல்ல. நிஜமான மனிதன். இந்த தம்பியை சந்திக்க நீஙகள் ஒட்டன்காடு வெட்டிக்கு அவசியம் வரவேண்டும். இக்கட்டுரையை வாசிக்கிற ஒவ்வொரு வரும் ஒட்டன் காடு வெட்டிக்கு அவசியம் வரணும். அக்கிராமத்து ஒட்டர்களை கைதுக்கி விட நீங்கள் ஒவ்வொரு வரும் பங்களிக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் ஈர்ப்பதற்காகவே இந்தக் கண்ணீர் கட்டுரையை உருக்கத்தோடும் நெகிழ்ச்சியோடும்; எழுதுகிறேன்.
தம்பி சிவசங்கரன் ‘டான்”; ‘டான்”;- என ஒவ்வொருவரின் அங்க அடையாளங்களை உரக்க சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் பதிவேட்டில் குறித்துக் கொண்டே அந்த வயோதிக தாத்தா, பாட்டிமார்கள், மற்றும் விதவைத் தங்கைகளின் முகங்களை, அவர்களின் உடல்களை ஊடுருவிப் பார்த்தேன்.
அந்த தாத்தா பாட்டிகள் உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்ட கரும்புச் சக்கைகளாய் என் கண்களுக்கு பட்டார்கள். அவர்கள் உயரமாய் இருந்தார்கள். ஓட்டிப் போய் இருந்தார்கள். அவர்களின் கண்கள் இடுங்கி, தோல்கள் சுருங்கி கருத்து, சரியாகச் சொல்வது. எனில், அவர்களின் எலும்புக் கூட்டை ஒரு தோல் போர்த்தி இருந்தது. ஒரு ஆச்சரியம், அவர்கள் உயிரோடு நல்லா நின்றார்கள். நல்லா நடந்தார்கள். சிரித்தார்கள் அடுத்த தடவை என் துணைவியை அழைத்து வந்து அவர்களுக்கு காட்டவேண்டும் என்றார்கள்.
இவர்கள் இந்த அறுபத்தைதந்து, எழுபது, என்பது வயதுகளிலும் நல்ல ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணமே அவர்கள் காலமெல்லாம் உழைத்திருந்தார்கள். அதாவது கல் உடைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “அய்யா. . .முப்பது வருடத்திற்கு முன்பாக இங்கே இருந்து கிழக்கு நோக்கி பார்த்தால் கல்ப்பட்டு மலை உயரமாய் தெரியும்மய்யா, இப்போ அந்த மலையே இல்லையய்யா” என்றார்கள். அந்த கல்ப்பட்டு மலையை வெடி வைத்து தகர்த்தவர்கள் இவர்கள் தான். அந்தக் கரும்பாறைகளை ஒண்ணரை இஞ்ச், ஒரு இஞ்ச், முக்கால் இன்ச்; ஜல்லிகளாக, துகள்களாக சுத்தியல் கொண்டு உடைத்து தயாரித்த கரங்கள் இவர்களுடைய கரங்கள்.
இன்று விழுப்புரத்தில் வானுயுயர்ந்து நிற்கிற மாவட்ட ஆட்சியரகம், நீதிமன்றக் கட்டிடம், எஸ்.பி. அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்டக் வளாகத்திலுள்ள அலுவலர் குடியிருப்புகள், விழுப்புரத்தை மேற்காக தொட்டுக் கொண்டு செல்லும் நாற்கர சாலை, பிரமாண்ட பாலங்கள் அனைத்துமே இவர்கள் கல்ப்பட்டு மலையை தகர்த்து சுத்தியல் கொண்டு அடி அடி என அடித்து நொறுக்கிக் தயாரித்த கருங்கல் ஜல்லிகளால் உருவான பிரமாண்டங்களே. முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, விழுப்புரத்தைச் சுற்றி பிரமாண்டமாக சமீபத்தில் எழும்பி இருக்கிற அரை டஜன் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளும் இவர்களின் ரத்தமும் வியர்வையும் படிந்த ஜல்லிகளால் உருவானவைகளே.
அந்தப் பிரமாண்டங்களோ வானுயுயர்ந்து நிற்கின்றன. இவர்களோ ஒல்லியாய், உயரமாய் ஒட்டிப்போய், கண்கள் இடுங்கி, தோல் கருத்துச் சுருங்கி நடை பிணங்களாய். ஓட்டிய வயிறோடு. ஓலைக் குடிசைகளில.; பிழியப்பட்ட கரும்புச் சக்கைகளாய். வீசி எறியப்பட்ட குப்பைக் காகிதங்களாய்.
அடுத்து தம்பி சிவசங்கரன் விதவைச் சகோதரிகளின் அங்க அடையாளங்களை சொன்னான். நான் இதைப் பதிவேட்டில் குறித்துக் கொண்டே ஒவ்வொரு சகோதரியின் முகத்தையும், முழு உடம்பையும் உற்றுக் கவனித்தேன்.
இவர்கள் முப்பத்தைந்து, நாற்பது வயதுகளில் இருந்தார்கள். தேக்கு மரத்தேகம் ஒவ்வொருவருக்கும். ஓவ்வொரு சகோதரிக்கும் மூன்று, நான்கு குழந்தைகள். ஒரு நூறு மைல் ஒரே மூச்சில் நடக்கும் தெம்பில் இருந்தார்கள். காரணம் இவர்களின் அன்றாட உழைப்பு இவர்களின் உடலை கட்டுகோப்பாக்கி இருந்தது. இவர்களில் யாருக்கும் வயிறு தள்ளிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உடல் தோல்கள் கருத்திருந்தன. சுட்டெரிக்கும் வெய்யிலில் குத்துக்கால் வைத்து இடைவிடாது சுத்தியல் கொண்டு அடித்து ஜல்லி உடைக்கும் இவர்களின் உடலும் கனகச்சிதமாய் இருந்தன. ஊடல் பருமனை குறைக்க இதற்காகவே சென்னை நகரெங்கும் புற்றிசல்களாய் எழும்பி இருக்கின்ற கிளினீக்குகளை நாடவேண்டி அவசிய மற்றவர்களாக இவர்கள். இவர்களின் கைகளோ காய்ப்பேறி. ஒவ்வொரு சகோதரியின் கைகளையும் பற்றி உள்ளங்கை காய்ப்பை, தழும்புகளை கண்டேன். இக்கணத்தில்த்தான் இவர்களை வர்க்கப்படுத்திட “தொழிலாளி வர்க்க கோடிக்கால் ப+தத்தின் பங்கும் பகுதியுமாய் இவர்களை ஆக்கிட என்னை உளப் ப+ர்வமாக அர்ப்பணித்தேன். அக்கணத்தில் மீண்டும் ஒரு தடலை புதிதாய் பிறந்தேன்.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய மத்திய இந்தியா. அங்கே அடுத்தடுத்து ஒட்டினாற்போன்று கணங்களின் ஐந்து குடியரசு நாடுகள். அருகிலேயே ஐந்தாறு மன்னராட்சி நாடுகள். மன்னராட்சி நாடுகள் எப்போதுமே குடியரசு நாடுகளை சூறையாடத் துடித்தன. ஆனாலும் அவைகள் ஒவ்வொரு போரிலும் தோல்வியைத்தான் தழுவின. காரணம், குடியரசு நாடுகளில் ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு குடிமகளும் போர் வீரன். மன்னராட்சி நாடுகளிலோ ஆண் படை வீரர்களே, அதுவும் கூலிப்பட்டாளம்.
குடியரசு நாடுகளில் மிகச் சிறந்த நாடு வைசாலி, அந்த நாட்டின் சேனை தலைவனாக சிம்மன் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தான். இவனுடைய மனைவி பெயரும் வைசாலி தான். சிம்மன் வைசாலி அவர்களின் திருமணத்திற்கு முன்பே வனங்களில் ஒன்றாய் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தவர்கள். ஆளுக்கொருபுறம் நின்று புலி வேட்டை நடத்தியவர்கள். கரடிவேட்டை நடத்தியவர்கள், குதிரைகளில் காற்றாய் பறந்தவர்கள். வாள் சுழட்டத் தெரிந்தவள் வைசாலி. வைசாலியின் மின்னல் வேக வாள் சுழட்டலில் காதலன் சிம்மனே திணறுவான்.
சிம்மன் வைசாலி நாட்டின் சேனைத் தலைவனாக பதவி ஏற்ற சில நாட்களுக்கு பின்பாக கணவனோடு வசிக்க தலை நகருக்கு வருகிறாள் வைசாலி.
அதே தலைநகரில் சியாமிளா என்கிற பிரபல அழகுக்கலை நிபுணர். வைசாலி நாட்டின் பெரிய குடும்ப பெண்மணிகள், யுவதிகளெல்லாம். இந்த சியாமிளாவை எப்போதும் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். எதற்காக எனில் தங்களின் புருவங்களை சிரைத்துக் கொள்ளவும், கை, கால்கள் மென்மையாகவும், “வழு வழு” வென்றும், “பள பள”ப்பாகவும் வைத்துக் கொள்ள.
அப்போது தான் தலைநகரில் குடியேறி இருந்த வைசாலிக்கு இது கடுங்கோபத்தை ஏற்படுத்தும். உள்ளங்கை மென்மையாக இருந்தால் வாள் ஏந்த முடியுமா? வைசாலி நாட்டின் ஆண் போர் வீரர்களோடு சேர்ந்து வைசாலிப் பெண்களும் வாள் ஏந்தினால்த்தானே வைசாலிக் குடியரசை முடியரசாக நிலைக்கச் செய்ய முடியும்? இல்லை எனில் மன்னராட்சி அன்றோ வந்து விடும். மன்னராட்சியின் கீழ் வாழ்வது ஒரு வாழ்வா? அதைவிட செத்துப் போய் விடலாமே- என்றெல்லாம் கணவன் சிம்மனிடம். சேனைத்தலைவனிடம் சினந்து பேசுவாள் வைசாலி.
பேச்சோடு நிறுத்திக் கொள்ளவில்லை வைசாலி. தலைநகரிலுள்ள தனது தோழிகள், உறவுப் பெண்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவாள். ஆணுக்கு சமமான மரியாதையை, நாம் பெற வேண்டும் எனில் அவர்களுக்குச் சமமாக நாமும் வாள் சுழட்டினால் தான் வைசாலி குடியரசை நிலைக்கச் செய்ய முடியும் என்று வகுப்பெடுப்பாள்.
இதற்கான பயிற்சிகளையும் உடனே தொடங்குவாள் வைசாலி. நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு பெண்ணின் கைகளும் எக்கணத்திலும்; வாளேந்தத் தயராக இருக்கவேண்டும். அதற்கு கைகள் காய்பேறி இருக்க வேண்டும் என்பாள் வைசாலி.
அன்றிலிருந்து வைசாலிப் பெண்கள் உலக்கை கொண்டு நெல் குத்துவார்கள். சுத்தியல் கொண்டு கல் உடைப்பார்கள். சுடு மணலில் கைகளை நுழைத்து நுழைத்து கைகளில் காய்ப்பேற்படுத்துவார்கள்.
அடுத்தடுத்து போர்கள் வந்து கொண்டே இருக்கும். சிம்மனின் தலைமையில் ஆண் வீரர்கள் வாள் சுழட்டுவதைப் போலவே வைசாலியின் தலைமையில் பெண் வீராங்கனைகள் வாள் சுழட்டுவார்கள். வைசாலிக் குடியரசு பல ஆண்டுகள் நிலைக்கும்.
பிறகு அயோக்கிய சாணக்கியன்- மன்னராட்சி நாடுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து – குடியரசு நாடுகளை எல்லாம் விழுங்கிவிடுவான். இது மத்திய இந்தியாவின் வரலாறு.
இப்போது எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரும் எனது தோழருமான மேலான்மை பொன்னுச்சாமி ஒரு சிறுகதையில் முத்தாய்ப்பாக சொன்ன கருத்து நினைவிற்கு வருகிறது.
நிலப்பிரப்புத்துவ முதலாளித்துவ பின்னணியுள்ள ஒரு குடும்பம் பொருளாதார நெருக்கடியால் சிதைகிற போது இக்குடும்ப பெண்கள் எவனோ ஒருவனுக்கு “சின்ன வீடாக” மட்டுமே ஆவார்கள்.
கைகள் காய்ப்பேறிய உழைக்கும் வர்க்கப் பெண்ணோ தனது கணவனின் மறைவிற்குப் பிறகு தான் பெற்ற குழந்தைகளின் தாயாக மட்டுமே வாழ்வாள். ஓட்டன் காடு விதவை சகோதரிகளுக்காக நான் ஏன் இப்படி துடிக்கிறேன் என்பது இப்போது உங்களுக்கு புரியும் இல்லையா. ஒவ்வொரு உழைக்கும் வர்க்க விதவைச் சகோதரியும் எனது பார்வையில் “வரீனியா” தான். யார் இந்த “வரீனியா” என்கிறீர்களா? ஸ்பார்ட்டகஸ் மனைவி.
கருப்பனுக்கு இந்த ஒட்டன்காடு வெட்டி என்பது துவக்கம் தான். இங்கே இருந்து செங்கம் முடிய சென்னை வரை பதினைந்து 20 லட்சம் பண்டி, கொட்டா பழங்குடி ஒட்டர் இனமக்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்தும் கருப்பனுக்கு அழைப்புகள் குவிந்து வருகின்றன. கருப்பன் தனது அறிவை, ஆற்றலை சவரக்கத்தியாக எப்போதும் பயன்படுத்தியதில்லை. அப்படி அவர் வளைந்து கொடுத்திருந்தால் அவரோடு பணியாற்றிய அவருடைய பல நண்பர்களைப் போல மாதம் ஒரு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு சுகபோகமாக இருந்திருக்க முடியும். 15 லட்சம் ஒட்டர்களிடமும் நாளைய நாட்களில் வர்க்கப்பணி செய்ய தன்னை அர்ப்பணித்திருக்கிறார் கருப்பன்.
பட்டினிக்கொடுமையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒட்டன்காடு வெட்டியிலுள்ள ஒட்டர்களான வயோதிக தாத்தா பாட்டிகள். மூன்று நான்கு குழந்தைகளுக்கு தாய்மார்களான விதவைகள். 200க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் அவர்களுக்கு அரசு அறிவித்து அமுல் நடத்தி வருகின்ற குறைந்த பட்;ச அரசு உதவி கூடப் பெறாமல் பெறத் தெரியாமல் அறியாமையில் ழுழ்கிக்கிடக்கிறார்கள். இவர்களுக்கான உள்@ர் இளைஞர் தலமையை ஒரு வாரம் முழுக்கவும் அவர்களுடனேயே தங்கி ஏற்படுத்தியும் முடித்துவிட்டார் கருப்பன்.
ஒட்டன்காடு வெட்டியிலுள்ள ஒட்டர் குடும்பங்கள் 75 மட்டும் தான். ஆனால் 30 முதியோர்கள் 25 விதவைகள், இவர்களில் முக்கால் வாசிப்பேர்களிடம் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி மோசடி புரோக்கர்கள் மூவாயிரம், இரண்டாயிரம் என லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் எவரும் எதையும் பெற்றுத் தரவில்லை. இந்த அப்பாவி மக்களை போய் ஏமாற்றி இருக்கிறார்களே அந்த வஞ்சகர்கள்.
சரி போகட்டும். இந்த 30 முதியோர்களுக்கும் பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே முதியோர் உதவித் தொகை கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் இவர்களின் வயது அப்படி. அதே போல் 10 வருடங்களுக்கு முன்பே விதவை உதவித் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களை எவரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தலா 10 வருடம் ஆட்சி நடத்தி விட்டர்கள். இப்போதும் ஆட்சியை பிடிப்பதற்காக இவர்கள் இருவரும் உச்சகட்ட லாவனி கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில்த்தான் தேர்தல் ஜூரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில்த்தான் இந்த ஆய்வறிக்கை தயாராகி பிரசுரமாகி நேரடியாகவும், வானவீதியில் இணையதளங்கள் மூலமாகவும் தமிழகத்திலும், உலகம் பூராவிலும் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.
வரும் 15 நாட்களுக்குள் இவர்களுக்கு. இந்தப் பாவப்பட்டவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால்த்தான் உண்டு. ஏனெனில் ஏப்ரல் 13 தேதி வரையிலும் தான் இவர்கள் இந்நாட்டு மன்னர்கள். அதற்குப் பிறகு இவர்கள் புழு பூச்சிகள். வாக்குப் பதிவிற்குப் பின்பாக கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், தாசீல்தார் ஆகிய மூவரும் இவர்களை நசுக்கி விடுவார்கள் நசுக்கி. வெற்றி பெறுகிற எம்.எல்.ஏ வோ கருப்பன் செய்கிற இந்த காரியத்திற்கு அப்பாவி ஒட்டர்களை பழி தீர்க்காமல் விட மாட்டார்;. இப்போது இவர்களிடம் 400 வாக்குகள், 400 துருப்புச் சீட்டுக்கள் இருக்கின்றன. இந்த 400 வாக்காளர்களில் 100 பேர்கள் சென்னையில் இருக்கிறார்கள். இந்த 400 பேர்களிடமும் கைபேசிகள் இருக்கின்றன.
ஏற்n;கனவே சென்னையிலுள்ள ஒட்டன்காடு வெட்டி இளைஞர்கள் நூறு பேர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாய் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கருப்பன் அரசியல் வகுப்பு எடுத்திருக்கிறார். இந்த மார்ச் ஒரு வாரம் முழுக்கவும் ஒட்டன் காடு வெட்டியிலேயே தங்கி ஒவ்வொரு நாளும் இரண்டு அரசியல் வகுப்புகள் நடத்தி இருக்கிறார். பெண்களுக்கென தனியாய், இளைஞர்களுக்கென தனியாய், இவர்களை தலமை தாங்கி வழி நடத்த விருக்கிற உள்@ர் நிர்வாகக்குழு நிர்வாகிகளுக்கென தனியாய் என ஒரு டஜன் அரசியல் வகுப்புக்களை கருப்பன் நடத்தி இருக்கிறார். பொதுவாகவே பாராளுமன்றம், சட்டமன்றம் என்பன . . . . தொழுவங்களே என்பது கருப்பனின் கணிப்பு. நீங்கள் வரும் ஏப் 13-ல் வாக்களிக்க இருப்பது ஏதோ ஒரு . . . . .க்குத்தான் என்பதை ஒட்டன் காடு வெட்டி 400 வாக்காளர்கள் மனதிலும் கருப்பன் பதிய வைத்திருக்கிறார்.
ஆனால் ஒட்டன் காடு வெட்டி ஒட்டர் 400 வாக்;காளர்களும் வாக்களிக்க வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தலில் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறார் கருப்பன்.
இந்த தேர்தல்களின் போதெல்லாம் இந்த 400 ஒட்டர் வாக்காளர்களுக்கும் சேர்ந்தே சில பெருச்சாளிகள் தேர்தல்களில் போட்டி இடும் வேட்பாளர்களிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு இவர்களுக்கு எதுவும் தராமல் ஏமாற்றி விடுவார்களாம்.
இந்த தடவை அந்த ஏமாற்று மோசடி நாடகம் நடக்காது. ஏனெனில் இந்த ஆய்வறிக்கை அச்சில் ஏற்றப்பட்டு முதலில் விநியோகிக்கப்பட விருப்பதே இந்த ஒட்டன் காடு வெட்டி கிராமம் அடங்கி இருக்கிற விக்ரவாண்டி தொகுதியில் போட்டி இருக்கிற வேட்பாளர்கள் இருவருக்கும் மற்றும் இப்பகுதியிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்குமே.
இந்தத் தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வக்கீல் இராம மூர்த்தி. தி.மு.க. வேட்பாளர் சிந்தாமணி ஆர்.வேலு. இந்த வேலு பொன்முடியின் நிழலில் இருப்பவராம். இது தான் ஒட்டன் காடு வெட்டி ஒட்டர்களின் நலனுக்கும் உகந்தது.
இப்போது ஒட்டன் காடு வெட்டி 400 ஒட்டர் வாக்காளர்கள் வேண்டுவது இதைத்தான்; 20 வருடங்களாக ஒய்வூதியம் வழங்கப்படாத 30 முதியோர்களுக்கும், பத்து, பதினைந்த வருடங்களுக்கு முன்பிருந்தே விதவை உதவித் தொகை வழங்கப் படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிற 25 விதவை பெண் மணிகளுக்கும் முதியோர் உதவித் தொகையும் விதவை உதவித் தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இந்த 45 பேர்களின் விண்ணப்பங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. மாம்பழப்பட்டு கிராம நிர்வாக அதிகாரியையும், மாம்பழப்பட்டிற்கான வருவாய் ஆய்வாளரையும், விழுப்புரம் தாசீல்தாரையும் உடனே ஒட்டன் காடு வெட்டி ஒட்டர்களிடம் பச்சை மைப்பேனா, அவரவர்களின் அரசு பதவிக்கான முத்திரை ஸ்டாம்புகளோடு அனுப்புக. தேர்தல் முடிந்த பிறகு எந்த அணி ஆட்சி அமைக்கிறதோ அந்த ஆட்சியிடம் அவ்வூர் விதவைகளும், முதியோர்களும் உதவித் தொகை பெற்றுக் கொள்வார்கள். இப்போதே இந்த 45 விண்ணப்பங்களிலும் முன் குறிப்பிட்டுள்ள மூன்று அலுவலகர்களும் கையெழுத்திட்டு பதவி முத்திரை குத்தி தர வேண்டும்.
இது ஒன்றும் தேர்தல் விதிக்கு புறம்பானது அல்ல. தேர்தல் ஒரு புறம் நடந்தாலும் வழக்கமான வருவாய்த் துறையின் வழக்கமான பணிகள் ஒழுங்காய் நடக்கத்தானே செய்கின்றன? இதுவும் வழக்கமான வருவாய்த்துறையின் அன்றாட பணிதானே?
இன்னும் ஒன்று தி.மு.க. ஆட்சி வருகிறதோ இல்லையோ... வரட்டும் அல்லது வராமல் போகட்டும். அக்கிராமத்தில் 30 கூறை வீடுகள் இருக்கின்றன. கலைஞர் அறிவித்திருக்கிற புதிய கான்கிரிட் வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி இவர்கள் 30 குடும்பங்களுக்கும் அடையாள அட்டை இப்போதே வழங்கப்பட வேண்டும்.
இன்னும் ஒன்று. அரசே அமைத்திருக்கிற கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர் மற்றும் கல், ஜல்லி உடைக்கும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இணைய விடமால் தடுப்பதற்காகவே கிராம நிர்வாக அலுவலர் சான்றளிக்கவேண்டும் என முதல்வர் கலைஞரே குதர்க்கம் பண்ணி இருக்கிறார். எனவே இதற்கான ஒட்டன் காடுவெட்டி ஒட்டர்கள் 200 விண்ணப்படிவங்களில் கிராம நிர்வாக அலுவலர் உடனே சான்றளிக்க வேண்டும். இந்த 200 விண்ணப்பங்களும் மாம்பழப்பட்டு வி.ஒ குடியிருக்கிற அடுக்கு மாடி குடியிருப்பின் எதிர் வீட்டிலேயே தயராக இருக்கிறது.
என்ன ...... நான் எழுதி இருக்கிற இந்த விசயங்கள் புரிஞ்சுச்சா இல்லையா?
“இப்போ எங்களை நம்பி எங்களுக்கு ஒட்டளியுங்க. நாங்க எம்.எல்.ஏ.ஆகி மந்திரி சபை அமைச்சு, மந்திரியாகி நிறைவேற்றித்தருகிறோம் என்பீர்கள். (சிந்தாமணி வேலு நிச்சியம் அமைச்சர் ஆகப் போவதில்லை. பக்கத்திலேயே பெரிய மந்திரியாக சகோதரர் பொன்முடி இருக்கிராரே) ஒட்டன் காடு வெட்டி ஒட்டர்களின் கோரிக்கைகளை நல்லா நிறைவேற்றுவீங்களே நீங்க! இனிமேலும் அவர்களை நம்பச் சொல்கிறீர்களாக்கும்? அவர்களோடு இருப்பவர் கருப்பன். நினைவில் வையுங்கள்
“அய்யா மாட்சிமை தங்கிய வேட்பாளர்களே, இப்பமே அவர்கள் ஓய்வூதியம், விதவை உதவிப்பணம் கேட்கலே, வருவாய்த்துறையினரின் வையெழுத்துக்களையும், கான்கிரிட் வீட்டுக்கான அடையாள அட்டையையும் தான் ஒட்டர்கள் இப்போ கேட்கிறாங்க. இதுலே என்னய்யா சிக்கல் இருக்கு?
தேர்தல் முடிந்த பிறகு செய்கிறோம் என்பதெல்லாம் ஏமாற்று. குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம், வண்ணத் தொலைக் காட்சிப்பெட்டி, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, பெண் பிள்ளைகளின் திருமண உதவி, மகப்பேறு நிதியுதவி, கருச்சிதைவு நிதி, இலவச பம்பு செட், இலவச எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டர்ன்னு எங்க தலையிலே அஞ்சு வருடத்திற்கு முன்பாக மிளகாய், மஞ்ச அரைச்சீங்களே. ஒட்டன் காடு வெட்டி ஒட்டர்களில் எத்தனைபேர்களுக்கு இதைத் தந்திருக்கீங்க? நெஞ்சுலே கை வச்சு சொல்லுங்க பார்ப்போம். ஒரே ஒருத்தருக்கு மட்டும் கான்கிரிட் வீட்டிற்கான அடையாள அட்டை தந்திருக்கீங்க இல்லையா?
20 வருடங்களுக்கு முன்பெல்லாம் தேர்தல் களம் காணும் அரசியல் கட்சிகள் கொள்கைப் பிரகடனங்களைத் தான் தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுவார்கள். 2006 தேர்தலின் போது தான் கருணாநிதி இதற்கு முடிவு கட்டினார். தெரு நாய்களுக்கு பொறை வாங்கிப் போடுவதைப் போல சப்பி, உறிஞ்ச எலும்புச் சக்கைகளை. நாய்களுக்கு போடுவதைப் போல இலவசங்கள் குறித்து உச்சபட்ச காமெடி கருணாநிதி, நிகழ்தியுள்ளார். இதை மிஞ்சுகிற இன்னும் பெரிய காமெடி நடத்தி இருக்கிறார் செல்வி ஜெயலலிதா.
தேர்தல் வாக்குறுதிகளில் “அண்ட புளுகர்” கருணாநிதியை “ஆகாசபுளுகி” ஜெயலலிதா விஞ்சி அசகாய சாதனை செய்திருக்கிறார். இந்த அண்டப் புளுகு, ஆகாச புளுகு சமாச்சாரங்களை தமிழக வாக்காளர்களில் 99.99 சதம் நம்பினாலும் கூட இந்த 400 ஒட்டர் வாக்காளர்கள் மட்டும் அணுவளவு கூட நம்ப மாட்டார்கள்.
தேர்தலில் உங்களின் ஒட்டுக்களைப் பெற ஒட்டுச் சீட்டு பொறுக்கி கும்பலால் இப்படி யெல்லாம் இலவச வாக்குறுதிகள் வழங்கப்படும் என்று கருப்பனால் இந்த ஒட்டர் வாக்காளர் 400 பேர்களுக்கும் எண்ணற்ற அரசியல் வகுப்புக்களால் கடந்த 3 மாதங்களாகவே உணர்த்தப்பட்டிருக்கிறது.
பின்வரும் கவிஞர் முகவை முத்துவின் கவிதை வரிகள் ஒவ்வொரு ஒட்டர் இளைஞருக்கும், இளம் பெண்களுக்கும் தெரியும். இந்த கவிஞர் கருப்பனின் தோழர். இந்தக் கவிதையை முகவை முத்து படைத்தது 10 வருடங்களுக்கு முன்பாக. இப்போது இவர் லியோ முத்துவின் கல்வி நிறுவனம் ஒன்றில் மதுரையை ஒட்டிய எலியார் பட்டியில் பணி செய்து கொண்டிருக்கிறார். அவருடைய கைபேசி நம்பர் 9600096715. அவரோடு பேசுங்கள். இதுபோன்ற நூறு “எக்ஸ்சாடரினல”; கவிதைகள் சொல்லுவார். எனக்கான டானிக்கே அவர் தான்.
அளுக்கொரு ரயில்
அடுத்துமொரு கப்பல்
வாக்காளர் மேலும் விரும்பினால்
மேலும் ஒரு விமானம்.
அப்புறம்
குடும்பத்திற்கு ஒரு எம்.பி. பதவி
கூடவே ஒரு டஜனாய்
ஆளும் கட்சி எம்.எல்.ஏ பதவி
பிறகு 2 டாக்டர் சீட்
இணையாக 4 என்ஜினியரிங் சீட்
பின்னர் ராக்கெட் ரகசியம்
கூடவே நீh முழ்கிக் கப்பல் விபரம்
இவைகளை
அடுத்த பகை நாட்டுக்கு கடத்தி-ட
சுலப ஏற்பாடு.
தேவையான குரூப்பில்
கிட்னி ஒன்றும்
மாற்று இதயமும்
ஆப்ரேசன் செலவுடன்.
24.03.2011 மாலையில் மேற்குறிப்பிட்ட பரிசு பொருட்களை நெருங்கியும் விட்டார் துணை முதல்வர் ஸ்டாலின். “வீட்டுக்கொரு குளிர்பதனப் பெட்டி வழங்கப்படும்” என
.
ஆனால் தி.மு.க தரப்பில் வழங்கப்பட்டுள்ள இலவசங்களின் கூட்டுத் தொகை இன்னும் 42 ஆயிரம் ரூபாய் ஆகவில்லையே? ஏனெனில் ஸ்பெட்ரம் ஜி-2 அலைக்கற்றை ஊழலில் சம்பாதித்திருக்கிற ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு ஒட்டுக்கே 42 ஆயிரம் ரூபாய் வழங்க முடியுமே! நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஒட்டுக்கே 42 ஆயிரம்.
நாளைக்கோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தின் போதோ செல்வி ஜெயலலிதா இப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கப்போவது நிச்சயம், வீட்டுக்கொரு “குளு குளு” ஏ.சி. மிஷன் இலவசமாக வழங்கப்படுமென.
முதுவை முத்து எழுதிய மற்று மொரு “நறுக்”; கவிதை இதோ,
நிறையக் குடித்தாலும்
நிதானம் தவறாதவர்
போட்ட சரக்கின்
போதை ஏறுமுன்..
கையில் இருந்த கறிக்கொழம்பு
கதர்ச் சட்டையில் சிந்திய போது
திடுக்கிட்டு
படிக்க வாங்கிய செய்தித்தாளை
கிழித்து துடைத்துச் சுருட்டி
தூக்கி எறிந்தார்.
அந்தக் காகிதத்தில் சிரித்தபடி
காந்தித்தாத்தா.
இந்த அரசியல்வாதி ஒட்டுப் பொறுக்கிகள் ஒட்டுக்களை பெறும் வரை தான் வாக்குறுதி நாடகமாடுவார்கள். இதெல்லாம் ஒட்டன் காடு ஒட்டர் இளைஞர் யுவதிகளுக்கான அரசியல் வகுப்புக்களில் அவர்களுக்கு தெளிவானவே உணர்த்தப்பட்டிருக்கிறது.
20 வருடங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஓய்வூதியத் தொகை தகுதி வாய்ந்த 24 முதியோர்களுக்கு வழங்கப்படவே இல்லை. 10 வருங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டிய விதவை உதவித் தொகை 25 விதவைகளுக்கு வழங்கப்படவே இல்லை. ஒரு நூறு ரூபாய் அளவிற்கு கூட ஒட்டர் 75 குடும்பங்களுக்கு வழங்கப்படவே இல்லை. இப்போது அள்ளி வீசுகிறார்கள் வாக்குறுதிகளை.
கேட்பவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு சொல்லுமாம். “வா உனக்கு ஏரோப்பிளைன் ஒட்டக் கற்றுத் தருகிறேன”; என்று. ஒட்டன் காடு வெட்டி கிராம ஒட்டர் வாக்காளர்கள் கேனயர்களாக இருந்தது அந்தக்காலம். இன்றோ ஒட்டன் காடுவெட்டி ஒட்டர்களின் வாக்குக்களை கேட்கிறவர்கள் தான் இன்று கேன கிறுக்கர்கள்.
எதுக்கு வழ வாழா. எதுக்கு கொழ கொழா. விட்டுத் தொலைப்போம். 49ஏ படிவம் இருக்கவே இருக்கிறது. ஆனால் 400 ஒட்டர் வாக்காளர்களும் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிக்கு செல்வார்கள். 49ஏ படிவத்தை நிரப்பித் தருவார்கள். இவர்களுக்கு பதிலாக கள்ள ஒட்டு என்பதெல்லாம் இனிமேல் நடக்காது. தமிழக புதிய டி.ஜி.பி போலோநாத் உத்தரவுப்படி இராணுவ பாதுகாப்போடு ஒட்டன் காடு ஒட்டர்கள் 49ஏ படிவம் அளிக்கப்போவது நிச்சயம். வேட்பாளர்களுக்கு பணிவோடு முன்பே எச்சரிக்கை யூட்டுவது இதைத்தான்; வழக்கம் போல ஒட்டர்களின் 400 வாக்குக்களுக்கும் சேர்த்து எவரிடமாது எதையாவது கொடுத்து ஏமாராதீர்கள். அந்தக் காலம் மலை ஏறி விட்டது. இது கருப்;பன் காலம்.
கடைசி கடைசியாய் இந்த பிரகடனத்தை இணையதளங்களில் வாசிக்கவிருக்கிற உலகம் பூராவிலும் இருக்கிற சமூக பிரக்னையாளர்களை சினந்து சிவந்த கருப்பன் கை கூப்பி வேண்டுவது இதைத்தான்,
இந்த 55 பேர்களுக்கும். இந்த ஒட்டர் பழங்குடி வறிய ஏழைகளுக்கு தமிழக அரசு இப்போதைக்கு எந்த நன்மையும் செய்து விடாது. இவர்கள் சாதிய அடுக்கு மூட்டைகளில் அடி மூட்டைகள். தவிரவும் இவர்கள் வறிய வறுமையிலும், நேற்றுவரை அறியாமை இருளில் அச்சத் தோடு இருந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு வரையும் கை தூக்கி விட வேண்டிய கடமை உங்கள் ஒவ்வொரு வருக்கும் உண்டு.
இங்கே இப்போது மிக மிக வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்கிற 15 முதியோர்களின் பெயர்களையும் 15 விதவைத் தங்கைகளின் பெயர்களையும் இறந்து போன கணவரின் பெயர்களோடு தருகிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரே முகவரி தான். திரு.பிரபாகரன் தஃபெ.வேலுப்பள்ளை அல்லது திருமதி. நளினி கஃபெ. முருகன் என்கிற மாதிரி பெயரிட்டு ஒவ்வொரு பெயருக்கு பின்னும் ஒட்டர் என்று குறிப்பிட்டு ஒட்டர் குடியிறுப்பு, ஒட்டன் காடு வெட்டி கிராமம் (இக்கிராமத்திற்கு பெயர் தான் ஒட்டன் காடுவெட்டி, இதே கிராமத்தில் பெரும்பான்மையினராக கவுன்டர்கள், உடையார், யாதவர், தலீத் கிறித்துவர் வசிக்கின்றனர்.
மாம்பழப்பட்டு அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், பின் கோடு: 605 302, தமிழ்நாடு என்று முகவரி இட்டு முதலில் ஆறுதல் கடிதம் எழுதுங்கள். நாட்களை தினமும் எண்ணிக் கொண்டிருக்கிற இந்த முதியோர்களுக்கும், மூன்று நான்கு குழந்தைகளுக்கு கஞ்சியாது ஊற்ற வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிற சகோதரிகளுக்கும் அவர்கள் கஞ்சியாது குடிக்க உதவுங்கள். நான் முன்பு குறிப்பிட்டுள்ள முகவரி பாணியில் நீங்களே முகவரி இடுங்கள் இந்த பாவப்பட்டவர்களுக்கு தயவு கூர்ந்து உதவுங்கள்.
மேலும் இம்மக்களின் உள்ளுர் தளபதியாக கருப்பனின் பட்டறையில் தயாரிக்கப்பட்டிருக்கிற அபூர்வ ஒட்டர் இளைஞன் டெல்லி.கே.எஸ்.வெங்கடேசனின் கைபேசி நம்பர்களோடு (8939280397, 8527819525) தொடர்பு ஏற்படுத்தி ஒரு முதியவரையோ, அல்லது ஒரு விதவைச் சகோதரியையோ தத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பத்தியை எழுதுகின்ற போது எனக்கு கண்ணீர் தான் வருகிறது. கடந்த ஐந்து வருடகால ஆட்சியில் தொழிலாளி வர்க்கத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்டிருக்கிற பல அநீதிகளை முழுப்பக்க ஆய்வுக்கட்டுரைகளாய் கம்யூனிஸ்ட் கட்சியிக் தமிழ் நாளேடான “ஜனசக்தி”யிலும் “நமது எம்.ஜியார்” நாளேட்டிலும் மா.நடராஜன் அவர்களின் “புதிய பார்வை” இதழிலும், இணையதளங்கள் வாயிலாகவும் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் அந்த அநீதிகளில் எல்லாம் இந்த விழுப்புரம் மாவட்டம் ஒட்டர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற 20 வருட தொடர் அநீதி தான் எனக்கு பெரும் அநீதியாகப்படுகின்றது. நெஞ்சே அடைக்கிறது. கண்களில் நீர் அரும்புகிறது. என் வலிமை மொத்தத்தையும் ஒன்று திரட்டி இதை எழுகிறேன். இன்னும் இரண்டு பத்திகள் மட்டுமே பாக்கியுள்ளது.
அன்ன ஆகாரத்திற்கு தவிக்கும் முதியோர்கள்.
1. திரு.லட்சுமண ஒட்டர் தஃபெ. சின்னக் குட்டி ஒட்டர்
2. திருமதி. லீலாவதி ஒட்டர் கஃபெ. லட்சுமனன் ஒட்டர்
3. திருமதி. லட்சுமி ஒட்டர் கஃபெ. கோவிந்தசாமி
4. திருமதி. சின்னத்தாய் ஒட்டர் கஃபெ. திரு. உண்ணாமலை
5. திருமதி. சின்னத்தாய் ஒட்டர், திரு. மாரிமுத்து ஒட்டரின் தாய்.
6. திருமதி. குப்பம்மாள் ஒட்டர் கஃபெ. திரு. நல்லான் ஒட்டர்.
7. திருமதி. ப+ங்காவனம் ஒட்டர் (திரு. ஏழுமலை, மணி ஒட்டர்களின் அம்மா)
8. திருமதி. நீலாவதி ஒட்டர் கஃபெ. திரு. மாணிக்கம் (லேட்)
9. திருமதி. பொட்டியம்மா ஒட்டர் கஃபெ. திரு. சின்னச்சாமி லேட்
10. திருமதி. லட்சுமி ஒட்டர் கஃபெ. கோவிந்தசாமி ஒட்டர்.
11. திருமதி. செங்கேணி ஒட்டர் கஃபெ. பொன்னன் ஒட்டர்
12. திருமதி. பாஞ்சாலி ஒட்டர் கஃபெ. லோகநாதன் ஒட்டர்
13. திரு. சுப்பிரமணி ஒட்டர் தஃபெ. குருவன் ஒட்டர்
ஊனமுன்றோர்
1. திருமதி. சந்திரா கஃபெ. கலியன் ஒட்டர்
2. திருமதி. அண்ணாமலை தஃபெ. நாராயணன் ஒட்டர்
3. திரு. நாகராஜ் தஃபெ. தங்கமுத்து ஒட்டர்
4. திரு. சிவசங்கரன் தஃபெ. பழநி ஒட்டர்
(நினைவுகள் அழிவதில்லை குருவியான்)
மூன்று நான்கு குழந்தைகளுக்கு கஞ்சி கூட ஊற்ற முடியாமல் தவியாய் தவிக்கிற
நமது அன்பான விதவைச் சகோதரிகள்.
1.திருமதி. வீரம்மாள் ஒட்டர் கஃபெ. கண்ணன் ஒட்டர் (லேட்)
2. திருமதி. கண்ணம்மாள் ஒட்டர் கஃபெ. கலியன் ஒட்டர் (லேட்)
3. திருமதி. இராணி ஒட்டர் கஃபெ. சங்கர் ஒட்டர் (லேட்)
4. திருமதி. நாவம்மாள் ஒட்டர் கஃபெ. கோவிந்தசாமி ஒட்டர் (லேட்)
5. திருமதி. கலியம்மாள் ஒட்டர் கஃபெ. கலியான் ஒட்டர் (லேட்)
6. திருமதி. செங்கேணி கஃபெ. நாராயணசாமி ஒட்டர் (லேட்)
7. திருமதி. குப்பம்மாள் ஒட்டர் கஃபெ. லட்சுமணன் ஒட்டர் (லேட்)
8. திருமதி. செல்வி ஒட்டர் கஃபெ. ராஜேந்திரன் ஒட்டர் (லேட்)
9. திருமதி. ப+மாதேவி ஒட்டர் கஃபெ. சுப்புராயன் ஒட்டர் (லேட்)
10. திருமதி. நாவம்மாள் ஒட்டர் கஃபெ. ஆறுமுகம் ஒட்டர் (லேட்)
11. திருமதி. உண்ணாமலை ஒட்டர் கஃபெ. பூங்காவனம் ஒட்டர் (லேட்)
12. திருமதி. குப்பம்மாள் ஒட்டர் கஃபெ. ஆனந்தன் ஒட்டர் (லேட்)
13. திருமதி. வனமயில் ஒட்டர் கஃபெ. நாகப்பன் ஒட்டர் (லேட்)
14. திருமதி. அல்லி ஒட்டர் கஃபெ. தனராஜ் ஒட்டர் (லேட்)
இவர்கள் அனைவரின் முகவரி; இவர்களின் பெயர் கணவர் பெயர், ஒட்டர் குடியிருப்பு, ஒட்டன் காடு வெட்டி கிராமம், மாம்பழப்பட்டு போஸ்ட், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, பின்கோடு – 605302.
இவர்களின் தளபதி ஒட்டர்; டெல்லி கே.எஸ். வேங்கடேசன் தஃபெ. சுப்பிரமணி ஒட்டர், ஒட்டர் குடியிருப்பு ஒட்டன் காடு வெட்டி கிராமம், மம்பழப்பட்டு அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், பின்கோடு -605302, தமிழ்நாடு, கைபேசி நம்பர்கள்: - 8527819525, 8939280397.
மீண்டும் ஒருவார்த்தை; இந்த கைபேசி நம்பரோடு தொடர்பு கொண்டு அளுக்கொருவரை தத்தெடுத்து கொஞ்ச காலத்திற்கேனும் காப்பாற்றுங்கள் இது நீங்கள் செய்யும் “உயிர்காக்கும் முதலுதவி” சிகிச்சை “தவிச்ச வாய்க்கு தண்ணிர்”. துவக்கத்தில் நீங்கள் உதவுங்கள். கொஞ்ச காலத்திற்குள் கருப்பன் இதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிடுவார். கருப்பனின் கரங்கள் பல கருவூலங்களுக்கு நெருக்கமான கரங்கள்.
ஒடுக்கு முறைக்கு எதிராகவும் அடக்கு முறைக்கு எதிராகவும், ஆத்திரங் கொண்டு வீதியில் இறங்கி போராடுவதும் போராளித்தனம் தான். ஒடுக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்ற, அநீதிக்கு உள்ளாகி இருக்கின்றவர்களுக்காக வருத்தப்படுதலும், கண்ணீர் சிந்துதலும், அவர்களுக்கு கைகொடுத்து உதவுவதும் கூடப் போராளித்தனம் தான்.
Thanks for sharing What an interesting site you have i really take a good look buy cocaine online and you can also take a good look at our blog too for more information buy crack cocaine online we also recommend you to take a good look at this site too they have good content buy mdma crystals online more of the site still want you to take a closer look too as they have really good content buy crystal meth online thanks for using your time to check on the link
ReplyDeleteBuy weed online
ReplyDeleteOrder Marijuana Online USA
Weed for sale
weed shop online
ReplyDeleteGlock store
Glocks for sale
glock43 gen4 mos
glock 17 gen4
glock 17 gen5
glock 21 For Sale
glock 26
glock 17x
glock 42
glock 19 gen 5
glock 19 Mos Gen 5
glock 45 gen 4
glock 19 gen-3
magazine usa gen4
glock 43 For Sale
glock 34 gen 5
g17l-long-slide-9x19mm
buy-liquid-lsd-online
ReplyDeletebuy-cocaine-powder-online-1gram
buy-mescaline-powder-online
volkswagen cocaine
buy colombian cocaine online
buy-amazing-columbian-cocaine
buy-cbd-oil-online/
buy-crack cocaine-usa-online
lsd-blotters-for-sale
buy-mescaline-powder-online
crack-cocaine-usa-online
buy-morning-glory-seeds
buy-mdma-pure-molly-pills